Skip to main content

Posts

புழுதியை நீக்கும் புயல்

 புழுதியை நீக்கும் புயல் தேவனுடைய கரங்களினால் வனையப்படுவதற்கு மாத்திரமல்ல, கறைகள் கழுவப்படுவதற்கும் நம்முடைய வாழ்க்கை ஆயத்தமாயிருக்கவேண்டும். நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் (சங். 51:7) என்பதுதானே பாவத்தில் விழுந்தெழுந்த தாவீதின் ஜெபம். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும் (ஏசா. 1:18) என்பது அவர் நமக்குத் தரும் வாக்குறுதி அல்லவா!  பாவம், நம்மை பிதாவினிடமிருந்து பிரித்துவிடும் என்பது நிச்சயம்; 'உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது' (ஏசா. 59:2) என்று வாசிக்கின்றோமே. நாம் பாவிகளாயிருந்தபோது, 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை
Recent posts

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்

இருப்பிடம் எங்கே? இதயம் எங்கே?

  இருப்பிடம் எங்கே?  இதயம் எங்கே? தனியொரு மனிதன் தவறிழைத்துவிட்டால், அவன் செய்துவிட்ட தவற்றிலேயே அவனைத் தனியே விட்டுவிட்டு, அவனை விட்டு விலகி, தூரமாகச் சென்றுவிடுபவரல்ல நமது தேவன். மாறாக, நேரடியாகவோ, தேவ மனிதர்கள் மூலமாகவோ அல்லது தீர்க்கதரிசிகள் மூலமாகவோ அவனைத் தட்டிக் கேட்டு, திருத்த முயற்சிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் அவன் சற்றாகிலும் செவிகொடாமற் போகும் பட்சத்தில், தன் வழிகளையும் மற்றும் தவறுகளையும் திருத்திக்கொள்ளாத பட்சத்தில், அவனைத் தண்டித்தாகிலும் அல்லது சிட்சித்தாகிலும் மீண்டும் அவனை தன் வசமாக இழுத்துக் கொள்ளணே;டும் என்று விரும்புபவர் நமது தேவன். 'இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்' (லூக். 19:10) என்ற இயேசு கிறிஸ்துவைக் குறுpத்த அறிமுகத்தோடு, 'நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான்  இழந்துபோகவில்லை' (யோவான் 18:9) என்ற அவரது அர்ப்பணிப்புள்ள ஜெபம் எத்தனை ஆழமான அர்த்தமுள்ளது. 'உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணா

மதியீனம்

மதியீனம் பரத்தின் பார்வையிலிருக்கும் நமது வாழ்க்கை, ஒருபோதும் உலகத்தின் தரத்திற்கு இறங்கிவிடக்கூடாது. அங்கங்கள் எல்லாம் அவருடையது என்று சொல்லிக்கொள்ளும் நம்முடைய சரீரத்தில், உலகத்தின் அசுத்தங்கள் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை (யோவான் 14:30) என்ற இயேசு கிறிஸ்துவின் வாய்மொழி, எத்தனையாய் அவரது வாழ்க்கை பிதாவை மாத்திரமே சார்ந்ததாயும், பிதாவுக்கு மாத்திரமே சொந்தமானதாயும் இருப்பதனை எடுத்துரைக்கின்றது, உறுதிப்படுத்துகின்றது. தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும் ; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் (சங். 139:23,24) என்று முழுமனதோடு அவரது ஆய்வுக்கு தன்னை அர்ப்பணித்து, நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர் (சங். 17:3) என்று அறிக்கையிடுகின்றானே தேவனால் ஊடுருவிப் பார்க்கப்பட்ட தாவீது.    அவர் வசிக்கின்ற ஆலயமாகிய நம்முடைய உள்ளம்

ஆபிரகாமைத் தேடி வந்த ஆண்டவர்

  ஆபிரகாமைத் தேடி வந்த ஆண்டவர் www.sinegithan.in அவரை கண்டுகொள்ளுங்கள் ஆராதனைகளானாலும், ஐக்கியமானாலும், ஆடல் பாடல்களானாலும், கூடுகைகளானாலும், பண்டிகைகளானாலும், கொண்டாட்டங்களானாலும், வேறெந்த பிற நிகழ்ச்சிகளானாலும், 'ஆண்டவர்' அடையாளப்படுத்தப்படுகின்றாரா? என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். மேல்மட்டமாய் இருக்கவேண்டியவைகளெல்லாம் மேலோங்கி நிற்க, ஆண்டவரும் மற்றும் அவரது வார்த்தைகளும் அடிமட்டத்திற்குத் தள்ளப்படுமென்றால், அவ்விடத்தை விட்டு நாம் அகன்று சென்றுவிடுவதே ஆண்டவருக்குப் பிரியமானவர்களாக நம்மை மாற்றும்.   மனு உருவில் இயேசு கிறிஸ்து வந்தபோதிலும், மனிதர்களில் உயர்ந்தவர் அவர்; 'என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?' (யோவான் 8:46) என்று தனது பரிசுத்தத்தைப் பிரகடனப்படுத்தினவர். 'இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை' (யோவான் 14:30) என்று உறுதியாக உரக்கச் சொன்னவர். 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரா ன் ' (யோவான் 14:6) என்றும், '

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு