Skip to main content

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா? 

இச்சையா?


'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்கூடுமல்லவா! பவுலும் இதனை தனது நிருபத்தில் எழுதி எச்சரிக்கின்றாரே (1தீமோ. 3:3,8; தீத்து 1:7,11).  ஆசீர்வாதத்திற்காகவும், ஆகாரத்திற்காகவும் மாத்திரம் ஆண்டவரைத் தேடுவோரின் பயணம் பாதியில் முடிந்துவிடும் அல்லது முறுமுறுப்போடு முற்றுப்பெற்றுவிடும். 

'ஐந்து அப்பம் மற்றும் இரண்டு மீனினால்' போஷிக்கப்பட்ட ஜனங்கள், மீண்டும் இயேசு கிறிஸ்துவைத் தேடி வந்தபோது, இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, 'நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்' என்று  மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோவான் 6:26) என்கிறாரே. இன்றைய நாட்களிலும், அநேகருடைய தேடுதல்களின் நிலை இதுவே. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொண்டதைத் தக்கவைத்துக்கொள்ளவும், பெற்றுக்கொண்டவைகளைப் பெருகச் செய்யவும், ஆசீர்வாதங்கள் தொடர்ந்து தங்களை வந்தடைந்துகொண்டிருக்கவுமே அவரைத் தேடுகின்றார்கள்; இத்தகைய தேடுதல், இத்தரையோடு நமது பயணத்தை நிறைவு செய்துவிடும்; மறுகரைக்கு நம்மை கொண்டுசேர்க்காது. 

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று (யாத். 12:35-38) என்றும், சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளையமிறங்கினபோது, ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: 'நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்? (யாத். 17:3) என்றும், ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள் (எண்;. 32:1) என்றும் வாசிக்கின்றோமே. அபப்டியென்றால், இஸ்ரவேல் ஜனங்கள் கானானை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, 'ஆடுமாடுகளும்' உடன் சென்றன என்பதை நாம் அறிந்துகொள்ளமுடிகின்றதே. 

    யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: 'நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான் தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்' என்றும், பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால், நீங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் ,துவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள்' (ஆதி 46:31-34) என்தான் தனது குடும்பத்தை பார்வோனுக்கு முன் அறிமுகப்படுத்துகின்றான்; அப்படியென்றால், ஆடுமாடுகளோடு அவர்களது வாழ்க்கை பிணைந்திருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ளமுடிகின்றதல்லவா!

என்றபோதிலும், இஸ்ரவேல் ஜனங்கள் பஸ்காவை ஆசரித்தபோது, அவர்களோடு கூட இருந்த அந்நிய ஜாதியினரால் அதை ஆசரிக்க இயலவில்லை. 'அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்' (யாத். 12:43) என்றும், 'விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்' (யாத். 12:48) என்றும் தேவன் கட்டளையிட்டிருந்தபடி, அதற்கு அவர்கள் விலக்கப்பட்டிருந்தார்கள். எனவே, இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை ஆசரித்து அதைப் புசிப்பதைப் பார்த்தபோது, விருத்தசேதனமில்லாத அந்நிய ஜனங்களுக்கு இறைச்சியின் மீது இச்சையுண்டாயிற்று. ஆனால், இறைச்சியைப் புசித்திருந்த இஸ்ரவேல் ஜனங்களிடத்தில், இறைச்சியைப் புசியாதிருந்த அந்நிய ஜனங்களின் இச்சை தொற்றிக்கொண்டதே. எனவே, பஸ்காவை அவர்கள் ஆசரித்திருந்தபோதிலும், இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? (எண்;. 11:4) என்கிறார்கள்; என்றபோதிலும், எகிப்திலே அவர்கள் சர்பிட்ட 'இறைச்சிகளின் பட்டியலை' (Non. Veg.) அவர்கள் சொல்லவில்லை; மாறாக, நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம் (எண்;. 11:5) என்று 'காய்கறிகளின் பட்டியலை'த்தானே (Veg.) அடுக்குகிறார்கள்; இதென்ன விகற்பம்? உடனிருக்கும் அந்நிய ஜனங்கள் இச்சிப்பது 'இறைச்சி', இவர்கள் இச்சிப்பது ஏன் 'காய்கறிகள்'? இது தேவ ஜனத்தினிடத்தில் 'இச்சையை' விதைக்க சத்துரு எடுத்த முயற்சியே! விளைவு, 'இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே' என்று, தேவைக்கு ஏற்ப தேவனிடமிருந்து அவ்வப்போது கிடைத்துக்கொண்டிருக்கும் உணவையே உதறித்தள்ளும் நிலைக்கு அவர்கள் உள்ளத்தை மாற்றிவிட்டதே! (எண்;. 11:6). 

    'இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தை திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து' (யாத். 16:3) என்றுதான் எகிப்தை அவர்கள் வர்ணித்தார்கள்; என்றபோதிலும், 'இறைச்சிப் பாத்திரத்தை' விட்டுவிட்டு, 'அப்பத்தை' மாத்திரம் வானத்திலிருந்து கொடுத்தார் ஆண்டவர்; என்றபோதிலும், இப்பொழுதோ, 'இறைச்சிப் பாத்திரங்களாகிய' 'இச்சிக்கும் பாத்திரங்களாகிய' 'அந்நிய ஜனம்' அவர்கள் பக்கத்திலிருந்ததால், 'இச்சையின் பாத்திரம்' அவர்களையும் பற்றிக்கொண்டது.

    நம்முடைய வாழ்க்கையும், இத்தகைய நிலைக்குள் தள்ளப்பட்டுவிடாதபடிக்கு எச்சரிக்கையோடிருப்போம்! தேவன் தரும் ஆசீர்வாதங்களைத் தள்ளி, விரோதிகளின் வாழ்க்கையில் காணப்படும் வலையில் சிக்கிக்கொள்ளாதிருப்போம், 

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி