Skip to main content

பண்டிகை புறப்படட்டும் (மத் 2:6)

 பண்டிகை புறப்படட்டும்



யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். (மத் 2:6) 

 

சுவிசேஷமாக அறிவிக்கப்படவேண்டியவர், சுவருக்குள்ளேயே கொண்டாடப்பட்டுவிடக்கூடாது. சுவிசேஷத்திற்காகச் செலவழிக்கப்படவேண்டியவைகள், சுவருக்குள்ளேயே அழிக்கப்பட்டுவிடக்கூடாது. கிறிஸ்துவின் பிறப்பு என்றதும், பலருடைய நினைவுவிற்கு வருவது அவர்களே. உள்ளத்தில் கிறிஸ்து பிறந்திராவிட்டாலும், ஊரோடு இணைந்து கொண்டாடத் தயங்குவதில்லை பலர். மேலும், தனிப்பட்ட மற்றும் குடும்ப சந்தோஷத்தையே முன் நிறுத்தி, பல்வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருப்போர் அநேகர். ஆடைகள் இல்லையென்றால் சந்தோஷம் அணைந்துபோய்விடும் பலருக்கு; பட்டாசுகள் இல்லையென்றால் பரபரப்பு இருக்காது; பலகாரங்கள் இல்லையென்றால் பசி தீராது; அலங்காரம் இல்லையென்றால் பண்டிகையே அழகாயிராது. இத்தனைக்கு மத்தியில், பின்னுக்குத் தள்ளப்படும் பிறருடைய வாழ்க்கையைச் சற்று எண்ணிப்பார்ப்போமென்றால், 'உன்னிடத்திலிருந்து புறப்படுவார்' என்ற சத்தியத்தினை நாம் உணர்ந்துகொள்ளமுடியும். கிறிஸ்து பிறப்பினை நினைவுகூறும் நாம், 'கிறிஸ்து நம்மிடத்திலிருந்து புறப்படவேண்டும்' என்பதையும் மறந்துபோய்விடக்கூடாது. 

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று (லூக் 16:21). என்னிடத்திலிருக்கும் ஐசுவரியம் எனக்கே என்ற ஐசுவரியவான், ஆபிரகாமின் மடியிலிருந்த லாசருவினிடத்திலிருந்து ஒரு துளி நீரைக்கூட வாங்க முடியவில்லையே. அப்படியே, ஆத்துமாவே, உனக்காக (தனக்காக) அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டபோது, தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் (லூக் 12:19,20) என்று சொன்னாரே. நம்முடைய ஐசுவரியம் தரித்திரரை நோக்கி புறப்படட்டும். 

இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார் (மத் 19:23-26). மனுஷரால் கூடாததுதான்; ஆனால், ஐசுவரியவான்கள் தேவனை ஏற்றுக்கொண்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து பரலோகத்தில் சேரும்படியான சிநேகிதர்களைச் சம்பாதிப்பார்களென்றால், இது சாத்தியமே. நம்முடைய ஐசுவரியம் நம்மை பரலோகில் சேர்க்கட்டும். 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் (லூக் 16:9) என்று இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தாரே. இதன் பொருள் என்ன? நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதான சிநேகிதர்களை நம்முடைய ஐசுவரியம் சம்பாதிக்கவேண்டும் என்பதுதானே. இன்றும், இயேசு கிறிஸ்துவை தங்களுடைய வாழ்க்கைக்காக மாத்திரமே உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம்; அடுத்தவர்களுடைய வாழ்க்கைக்கும் அவர் வேண்டுமே என்று தங்களிடத்திலிருக்கும் இயேசு கிறிஸ்துவோடு புறப்பட்டுச் செல்லவேண்டுமே. நம்முடைய ஐசுவரியம் பரலோகத்திற்கு ஆள் சேர்க்கட்டும். சமாதானமற்று வாழும் மற்றவர்களை கிறிஸ்து ஆளவேண்டுமென்றால், கிறிஸ்துவை சுமந்துகொண்டிருக்கும் நாம் புறப்பட்டுச் சென்று, சுவிசேஷமாக அவரை அறிவிக்கவேண்டும்.


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...