Skip to main content

தாமதமாகும் தீர்ப்பு

 

தாமதமாகும் தீர்ப்பு



அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். (யாத் 3:8)


பிள்ளைகளோடு தேவன் இடைபடுவதனையும், தனக்கும் மற்றும் தன் ஜனத்திற்கும் விரோதமாக நிற்கும் எதிரிகளோடு தேவன் விளையாடுவ தனையும் வசனத்தின்படி அறிந்து உணர்ந்துகொண்டோமென்றால்; உள்ளத்தில் பயம் என்பது இல்லாமற் போய்விடும். 'விடுதலை வேண்டும்' என்ற வேண்டுதலுக்கு விடை கிடைக்காமல், மீண்டும் மீண்டும் எதிரியின் கூண்டுக்குள்ளேயே குடியிருக்கும்படியான சூழ்நிலை உண்டாகும்போது, அதனை நினைத்து நாம் கலங்காமல், நாம் விடுதலையாகும்போது, கூண்டோடு மீண்டுவரக்கூடாத நிலைக்கு எதிரியைத் தள்ளும்படியாகவே தேவனால் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ளுவது அவசியம். அழிக்கப்படவேண்டிய விரோதிக்காக, ஆழமாக ஆண்டவர் குழியினைத் தோண்டும்வரை நாம் பொறுமையுடன் காணப்படவேண்டியது அவசியம். விரோதியை வீட்டு வாசலை விட்டு வெளியேற்றிவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே திருப்தி கொள்ளும் மனிதர்கள், தங்கள் வீட்டின் வாசலைத் திறக்கும்போது மீண்டும் விரோதி அவர்களது வீட்டிற்குள் வந்துவிடக்கூடுமே; அல்லது, வீட்டு வாசலை விட்டு அவர்கள் வெளியேறும்போது விரோதிகளால் வளைக்கப்பட்டுவிடக்கூடுமே. எனவே, எதிரிகளிடமிருந்து தற்காலிகமான ஓர் விடுதலையினை அல்ல, தீர்க்கமான தீர்வைக் கொடுத்து நம்மை விடுதலையாக்கும்படியாகவே கர்த்தர் விரும்புகின்றார். 

எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா (யாத் 3:7,9,10) என்றுதான் மோசேயை அழைத்தார் ஆண்டவர். அடிமைத்தனத்திலிருக்கும் தன்னுடைய ஜனத்தை பார்வோனின் பிடியிலிருந்து விடுதலையாக்குவதுதான் தேவனது நோக்கமும் திட்டமும்; என்றபோதிலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான் (யாத் 4:21) என்று கூறுவது, சற்று வித்தியாசமானது மாத்திரமல்ல, சத்தியத்தை நாம் அறிந்துகொள்ளும்படியானது. 'விடுதலையாக்குவேன்' என்று சொல்லும் அதே தேவன், 'அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்' என்றும் பார்வோனைக் குறித்து சொல்லுவது ஏன்? பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும். நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன் (யாத் 7:2,3) என்றே சொல்லுகின்றார் தேவன். 

'போகவிடான்' (யாத். 4:21) என்று சொல்லும் அதே தேவன், 'எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு' (யாத். 4:23) என்று பார்வோனிடத்தில் கூறும்படியாக மோசேயை அனுப்புகின்றார். என்றபோதிலும், தேவன் சொன்ன வார்த்தைக்கு மோசே இணங்கி, அப்படியே பார்வோனிடத்திற்குச் சென்று தேவன் சொன்னதைச் சொன்னான். ஆண்டவரே! பார்வோனின் இருதயத்தைதான் நீர் கடினப்படுத்துவேன் என்கிறீரே, பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிடான் என்றும் கூறுகின்றீரே, அப்படியிருக்க, நான் சென்று பார்வோனிடத்தில் 'அனுப்பிவிடு' என்று சொல்லுவதினால் என்ன பிரயோஜனம் என்று சொல்லவில்லை; மாறாக ஒவ்வொரு முறையும் தேவன் சொல்லும் வார்த்தையை அப்படியே பார்வோனிடத்தில் தொடர்ந்து சொல்லிக்கொண்டுவந்தான். தேவன் ஏற்கனவே மோசேயினிடத்தில் சொல்லியிருந்தபடி, 'நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தih அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை' (யாத் 5:2) என்றே பதிலுரைக்கின்றார் பார்வோன். கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான் (யாத் 7:13) என்றே வாசிக்கின்றோம். ஒவ்வொரு முறையும் தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்த கடினப்படுத்த, வாதைகள் எகிப்தின்மேல் வந்தது உண்மையே; என்றபோதிலும், ஒவ்வொரு முறை பார்வோனது இருதயம் கடினப்படும்போதும், அவனுக்காக ஆயத்தப்படுத்தப்படும் குழியின் ஆழம் அதிகரித்துக்கொண்டேயிருந்தது என்ற மேலும் ஒரு சத்தியத்தை நாம் இங்கே அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். 

நம்முடைய விடுதலைக்காக தேவனிடத்தில் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தாலும், தேவன் தாமதிப்பது சத்துருவுக்கு சரியான சிறையினை ஆயத்தப்படுத்தவே. 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி