Skip to main content

பாக்கியவான்கள், அதிக பாக்கியவான்கள்

 

பாக்கியவான்கள், அதிக பாக்கியவான்கள்

 

ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.(லூக் 11:28).

பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற பரத்திலிருந்து புவிக்கு இறங்கிவந்த இயேசுவையும், அதற்காக அவர் தரித்துக்கொண்ட மனுட உருவையும் நாம் அறிந்திருந்தாலும், புரிந்திருந்தாலும், கிறிஸ்துமஸ் என்ற பெயரில் இயேசுவின் பிறப்பினைப் பண்டிகையாக நாம் ஆசரித்தாலும், தனது சரீரத்தினையும், பிதாவின் சித்தத்தினையும் இயேசு அளக்கின்ற வண்ணம் அளக்க நாம் பல வேளைகளில் தவறிவிடுகின்றோம். எனவே இயேசு, 'பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத் 7:21) என அழுத்தமாகச் சொன்னார். மேலும், என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? (லூக் 6:46) என்றும் வினவுகிறார். இயேசுவை புகழ்ந்து பாட மட்டும் அழைக்கப்பட்டவர்களல்ல நாம், அவர் சொற்படி அடியெடுத்து வாழவும் அழைக்கப்பட்டவர்கள். இயேசுவுக்குப் பின்னே எத்தனை வருடம் சென்றுகொண்டிருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்க மறுப்பார்களேயாகில், மறுவுலகில் பரலோகம் அவர்களுக்கு இல்லை என்பது நிச்சயம். ஆலயத்தை நேசிப்பதாலும், போதகரை நேசிப்பதாலும், ஊழியங்களை நேசிப்பதாலும் மாத்திரம் நாம் உன்னத வாழ்விற்குள் பிரவேசித்துவிட முடியாது; மாறாக, நம்முடைய வாழ்க்கையில் அவரது சித்தம் நிறைவேறவேண்டும், அவரது சித்தத்தின்படி நாம் செயல்படவேண்டும்.

ஒருமுறை இயேசு போதித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயாரும், சகோதரரும் அவரைக் காணும்படியாகவும், அவரிடத்தில் பேசும்படியாகவும் அவரைத் தேடி வந்தார்கள். உள்ளே நுழைய வழி இல்லாதபடியினால், வெளியிலே நின்றுகொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார் (மத் 12:47-50). பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்களைத் தனது தாயாகவும், சகோதரராகவும் இயேசு சொல்லியிருக்க, நாம் அந்த ஸ்தானத்தினை அடைந்து அவரது தாயாகவும், சகோதரராகவும் பார்க்கப்பட்டால் எத்தனை பாக்கியம் பெற்றவர்களாயிருப்போம்!

சித்தத்தின்படி செய்கிறவர்களே இயேசுவின் தாய் என்று இயேசுவே போதித்திருக்க, சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, இயேசு ஒரு சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்று (யோவா 19:27) ஒருவனுக்குமாத்திரம் சொல்லப்பட்டதை உலகிற்குச் சொல்லப்பட்டதாக உருமாற்றம் செய்துகொள்வது சத்தியமல்ல. அது தனிஒரு மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அவ்வளவே. இயேசுவின் சித்தத்தையும், சத்தத்தையும் புரிந்துகொள்ளாத கூட்டத்தினர் 'பாக்கியமுள்ளவளென்று' மரியாளை வாழ்த்தி வாழ்த்தி, 'அதிக பாக்கியமுள்ளவர்ளாக' தாங்கள் மாறவேண்டுமென்பதை மறந்துவிட்டனர். இறந்துபோன மரியாளை வாழ்த்துவது இம்மைக்குரியது, உயிர்த்தெழுந்த இயேசுவின் தாயாக நாம் வாழ்வது பரத்துக்குரியது. இயேசுவின் சரீரப்பிரகாரமான தாயாகிய மரியாளின் உயிர்த்தெழுதலும், சித்தத்தின்படி செய்து தாயாக மாறிய நம்முடைய உயிர்த்தெழுதலும் ஒன்றாகவே நிகழும்; நாம் அதிக பாக்கிவான்களல்லவா!

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...