Skip to main content

பணியா, பிணியா?

 

பணியா, பிணியா?


தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதே நமது பிரதான பணி. பிணிகள் இப்பணியை முந்திவிடக்கூடாது. இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து,ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார் (மத் 4:23; 9:35). ராஜ்யத்தின் சுவிசேஷத்தை பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கவேண்டியதையே முதற்பணியாகக் கொண்டிருந்தார் இயேசு (மத். 24:14). தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார் (லூக் 4:43). பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார் (லூக். 8:1). தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்ளூ நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக் 9:60). சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.(மாற் 13:10) என்பதுதானே இயேசு நமக்கும் கொடுத்த கட்டளை. 


தாம் செய்ததையே சீஷர்களும் பின்பற்றவேண்டும் என்று விரும்பினார் இயேசு. எனவே, தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார் (லூக் 9:1,2). அவர்களும் புறப்பட்டுப் போய் இயேசு சொன்னபடியே செய்தார்கள். கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள். (லூக் 9:6)

இதையே ஆதி அப்போஸ்தலர்களும் செய்தார்கள். தேவனுடைய ராஜ்யத்துக்கும், இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து பிலிப்பு பிரசங்கித்தான் (அப். 8:12). பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக் குறித்து சம்பாஷணைபண்ணி புத்திசொல்லிக்கொண்டு வந்தான் (அப். 19:8; 20:25; 28:31).

ஊழியர்களாகிய நாம் இந்த வரிசையிலிருந்து பிசகிவிடக்கூடாது. பிணிகளுக்கு முதலிடம் கொடுத்து, தேவ ராஜ்யத்திற்கடுத்த பிரசங்கங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடாது. பாவத்தில் சிக்கியிருக்கும் உலகத்தின் மக்கள், பிசாசின் ராஜ்யத்திற்குள் அடிமைப்பட்டுக்கிடக்கும் மனிதர்கள், சுவிசேஷத்தால் மாத்திரமே விடுதலை பெறமுடியும். வியாதிகள் குணமானால், அது சரீரத்திற்கு மாத்திரமே விடுதலையைக் கொண்டுவரும்; விடுதலை பெற்ற சரீரம் மீண்டும் மண்ணோடு அழிந்துபோகக்கூடியதல்லவா. விலையேறப்பெற்ற ஆன்மாவை விடுவிக்கும் பணியே மனிதர்களை நித்தியத்திற்குள் கொண்டு சேர்க்கும்.

இன்றைய நாட்களில், ஊழியர்கள்கூட தங்களை தலைகீழாகவே அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். கைப்பிரதி ஒன்றில், ஊழியரின் பெயரைக் குறிப்பிட்டு, அத்துடன், 'குணமாக்கும் வரம் பெற்றவர்' என்ற அடைமொழியும் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த கைப்பிரதியைக் காணும் மக்கள் சுகத்தைத் தேடி வருவார்களா அல்லது சுவிசேஷத்தைத் தேடி வருவார்களா? மக்கள் சுவிசேஷத்தை விட்டு விட்டு சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஊழியர்களே காரணமாகிவிடுகின்றனரே. அப்படி குணத்தைத் தேடி வரும் கூட்டம் மேடைக்கு முன் அமர்ந்திருந்தால், ஊழியரின் மனதில் சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்ற எண்ணமா அல்லது கூட்டத்திற்கு வந்தோர் சுகமாகவேண்டும் என்ற எண்ணமா எது மேலோங்கி நிற்கும்? சுகமாக்கவேண்டும் என்ற எண்ணம்தானே ஊழியரின் மனதில் மேலோங்கி நிற்கும்; இல்லையென்றால், அவர் 'சுகமளிக்கும் வரம் பெற்றவர்' என்ற தனது பெயரைத் தக்கவைத்துக்கொள்ள முடியாதே. எத்தனை பரிதாபமான நிலை. ஊழியர்களாகிய அவர்கள் தங்களைத் தாங்களே நிர்ப்பந்தப்படுத்திக்கொள்கிறார்கள். இதன் விளைவு, பரலோக இராஜ்யத்தை பெற்றுக்கொள்ள இயலாதவர்களாக, சுகத்தை மட்டுமே பெற்றுக்கொண்டு கூட்டத்திலிருந்து விடைபெறுகின்றனர் ஜனங்கள். எலியைப் பிடிக்கவேண்டும் என்று கூண்டிற்குள் தேங்காயை வைத்து இரவு முழுவதும் காத்திருந்து பின்னர், காலையில் எழுந்து பார்த்தால், தேங்காயை எலி சாப்பிட்டுவிட்டு, கூண்டிற்குள் எலி சிக்காதிருந்தால் நாம் சந்தோஷப்படுவோமா. இன்று பல வேடர்கள் (ஊழியர்கள்) சந்தோஷப்படுகின்றனரே. எலி தேங்காயைத் தின்பதற்காக நாம் கூண்டு வைக்கவில்லை, எலியைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தானே கூண்டை ஆயத்தப்படுத்தினோம். இந்த நோக்கம் தவறலாகுமோ? எலிகள் தேங்காயைத் (சுகம்) தின்றதிலேயே ஊழியர்கள் திருப்தியடைந்துவிடுகின்றனர். உங்கள் ஜெபத்தினால், எனக்கு சுகம் கிடைத்தது என்போபரின் சாட்சி அதிகமாயிருக்கின்றது, அது ஊழியருக்கு வலிமை சேர்க்கிறதாகவும் எண்ணப்படுகின்றது. தரித்திரருக்கு ஐசுவரியவான்களாவது எப்படி என்றல்ல, சுவிசேஷமே முதலில் பிரசங்கிக்கப்படுகிறது. (மத் 11:5)

அப்போஸ்தலர்களை இயேசு ஊழியத்திற்கு அனுப்பினார்; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளை சொஸ்தமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (லூக். 9:1,2). இயேசு அனுப்பியவாரே அதிகாரத்தைப் பெற்ற சீஷர்களாகிய அப்போஸ்தலர்கள் ஜனங்கள் மத்தியில் சென்று ஊழியத்தைச் செய்தனர். இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தனர், பிணியாளிகளைக் குணமாக்கினர். அவர்கள் திரும்பிவந்தபோது, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள் (லூக் 9:10). ஆனால், இயேசுவோ, ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் (லூக் 9:18) என்று கேட்டார். சீஷர்கள் ஊழியத்தை செய்து முடித்த பின்னர், தாங்கள் செய்தவைகளையே இயேசுவினிடத்தில் விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தனர். இயேசுவைக் குறித்து ஜனங்கள் சொன்னவைகளை சொல்லத் தவறிவிட்டனர்; அதனை இயேசுவே கேட்கவேண்டிதாயிற்று. இயேசுவின் கேள்வியைத் தொடர்ந்தே, 'சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார்' என்றும் சொல்லுகிறார்கள் (லூக் 9:19) என்ற பதில் சீஷர்களிடமிருந்து வந்தது.

சீஷர்களைப் போன்றே நாமும் சில வேளையில் நடந்துகொள்கிறோம். நம்முடைய கண்களுக்கு நாம் செய்துகொண்டிருப்பது மாத்திரமே தெரிகின்றது. ஊழியங்களில் நாம் செய்தவற்றையே ஜெபத்தில் விவரித்துச் சொல்லிக்கொண்டேயிருக்கின்றோம். ஆனால், நம்முடைய ஊழியத்தின் பிரதிபலனாக, இயேசுவை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்ற பதிலைச் சொல்லத் தவறிவிடுகின்றோம். சீஷர்களது ஊழியத்தின் மூலமாக ஜனங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது, சுகத்தையும் பெற்றார்கள்; ஆனால், இயேசுவைக் குறித்தோ, 'யோவான் ஸ்நானகன்' என்றும், 'எலியா' என்றும், 'தீர்க்கதரிசி' என்றுமே அவர்கள் அறியமுடிந்தது. சீஷபுர்கள் ராஜ்யத்தைக் குறித்துப் பேசினாலும், அதிகாரத்தைக் கொடுத்த இயேசுவை பிரசங்கத்தில் முக்கியப்படுத்தப்படவில்லை. இயேசுவே மேசியா என்ற அறிவை ஜனங்கள் மத்தியில் அறிவிக்கத் தவறிவிட்டனர். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்ற வழியாகிய இயேசுவைக் குறித்த அறிவில்லாமல், பரலோகத்தைக் குறித்த அறிவை மட்டுமே ஜனங்கள் பெற்றார்கள். வழி சரியாக அறிவிக்கப்படாதிருக்கும்போது, பரலோகத்தைச் சென்றடைவது சாத்தியமாகுமோ? சீஷர்களின் பிரசங்கம் பிரலேகத்தைக் காட்டியது, ஆனால், பக்கத்தில் இருக்கும் இயேசுவை மேசியாவாகக் காண்பிக்கவில்லை. எனவே, சீஷர்களுக்குத் தெளிவான அறிவு இருக்கின்றதா என்பதை அறிந்துகொள்ளும்படியாகவே, 'நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்' என்று இயேசு கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான் (லூக் 9:20).

இயேசுவே தேவனுடைய கிறிஸ்து என்ற அறிவு சீஷர்களுக்குள் இருந்தும், அதனை அறிவிக்கத் தயங்கியது ஏனோ? அவர்கள் அறிவிக்காததைக் கண்ட இயேசு, அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார் (லூக் 9:21). இந்தக் கட்டளையை அவர்கள் ஊழியத்திற்குப் புறப்படும்போது இயேசு கொடுக்கவில்லையே. அவர்கள் அறிவிக்கத் தயங்கியதை இயேசு சிலுவையில் அறிவித்தார். இயேசுவின் பாடுகளுக்குப் பின்னர், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற பின்னர் சீஷர்கள் இதனை தைரியமாகப் பிரசங்கித்தனர். நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் (அப் 2:36) பேதுரு.

குணமாக்குவதற்கு எல்லா இடத்திலும் வரவேற்பு உண்டு, ஆசீர்வாதங்களுக்கு எல்லா இடங்களிலும் வரவேற்பு உண்டு, இவைகளை ஜனங்கள் தள்ளாது ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால், ஒரே தெய்வம் இயேசுவே என்பதை நாம் அறிவித்தால், ஜனங்கள் தள்ளிவிடுவார்கள். அதற்காக, மேசியாவைத் தள்ளிவிட்டு, ஆசீர்வாதங்களை மட்டும் கொடுக்கும் ஊழியர்களாக நம்மை மாற்றிக்கொள்வது கூடுமோ; கூடாதே.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...