Skip to main content

தீர்ப்பு

 

தீர்ப்பு



நமக்கும் தேவனுக்கும் இடையிலான தொடர்பினைக் கொண்டு மாத்தி;ரமல்ல, நமக்கும் பிற மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பினையும் மற்றும் உறவினையும் கொண்டே பரலோகத்தில் தீர்ப்பு எழுதப்படுகின்றது என்பதை நாம் வசனத்தின் வாயிலாக அறிந்துகொள்வதும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் வாயிலாகப் புரிந்துகொள்வதும் மிக மிக அவசியம். மற்றவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டு, நம்முடைய நீதியினால் மாத்திரம் பரலோகத்தின் வீதியில் உலகை விட்டுச் சென்றபின் உலாவிவிடலாம் என்று நாம் மனக்கோட்டை கட்டிவிடக்கூடாது. 

உலகத்தில் உண்ணும்படியாகவும், உடுத்தும்படியாகவும், உறங்கும்படியாகவும் எத்தனையோ விதமான ஐசுவரியங்களைப் பெற்றிருந்ததான். இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான் (லூக் 16:19). என்றபோதிலும், பருக்கள் நிறைந்தவனாக, படுக்க இடமற்றவனாக, பசியாற உணவுமற்றவனாக தன்னுடைய வீட்டின் வாசலினருகே தரித்திரமான நிலையில் கிடந்த லாசருவுக்கு (லூக். 16:20) உதவும்படியாக அவனது உள்ளம் உந்தப்படவில்லையே. நாய்களின் நாவு லாசருவின் பருக்களை நக்கி ருசிபார்த்துக்கொண்டிருந்தபோதிலும், லாசருவின் நாவோ ஐசுவரியவானுடைய மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைக்கூட 'ஆசையாயிருந்தபோதிலும்' (லூக். 16:21)ருசித்துப்பார்க்க இயலவில்லையே. ஆகாரமில்லாதிருந்தும், லாசரு ஆண்டவரோடிருப்பதை ஐசுவரியவானின் கண்கள் காணவில்லையே. எனவே இயேசு கிறிஸ்து, 'பசியாயிருந்தேன்,  எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள்' (மத் 25:35,36) என்று கூறுகின்றார். மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்ற நீதி அல்லவோ பரலோகத்தின் வீதிக்குள் அவர்கள் நுழைய பாத்திரவான்களாக மாற்றிற்று. (மத் 25:40)

 தன்னிடத்தில் எத்தனை ஐசுவரியமிருந்தும், 'தரித்திரனாகிய லாருவை நினைத்துக்கூட பார்க்காத ஐசுவரியவானை' பரலோகம் ஏற்றுக்கொள்ளவில்லையே. நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்ட வாலிபனை நோக்கி, நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்று இயேசு கிறிஸ்து சொன்னபோது, அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 19:16,21-23)

என்று சொன்னாரே. கட்டளைகளையெல்லாம் சிறுவயது முதல் கடைபிடித்திருந்தும் (லூக். 19:20), அவனிடத்தில் காணப்பட்ட குறைவினை நீக்கி, அவனை பூரண சற்குணனாக மாற்ற இயேசு கிறிஸ்து முயற்சித்தபோது, 'பரலோகத்தைக் காட்டிலும் தன்னிடத்திலிருக்கும் ஐசுவரியமே பிரதானமானது; பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அதனை தரித்திரர்களுக்குக் கொடுத்துவிட முடியாது' என்ற எண்ணத்தோடு அவன் போய்விட்டது, முதலாவது அவன் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடவில்லை என்பதை எத்தனை தெளிவாகக் காட்டுகின்றது. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6:33) என்றே இயேசு கிறிஸ்து கற்றுத் தந்தார். என்றபோதிலும், 'தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்காக' நம்மிடத்தில் கூடக்கொடுக்கப்பட்டிருப்பதையும் விட்டுவிடவும் ஆயத்தமாயிருக்கவேண்டுமே. கோபாக்கினையின் நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும் (நீதி. 11:4) என்றல்லவா வாசிக்கின்றோம். 

சீஷர்களுக்கு ஜெபிக்கும்படியாக இயேசு கற்றுக்கொடுத்தபோதும், எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் என்றும், மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார் (மத் 6:12,14) என்றுமல்லவா கற்றுக்கொடுத்தார். மற்றவர்களுடனான உறவை சரிசெய்யாமல், 'பிதாவே, பிதாவே' என்று கூப்பிடுவதில் பிரயோஜனமில்லை. தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? (1 யோவான் 4:20). நாம் மன்னிக்கப்பட்டதை மறந்து, நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டவர்களை நாம் மன்னியாமல் கடினமாய் நடத்துவோமென்றால், நம்முடைய மன்னிப்பும் பிதாவினால் மறக்கப்படுவது உறுதி (மத். 18:23-35). தீர்ப்பினை தீர்மானிப்பது நமது கையிலேயே.  


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...