Skip to main content

என்ன கிடைக்கும்? (மத். 26:14-16)

  என்ன கிடைக்கும்?



பிசாசுக்கு  இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27) என்றார் பவுல். எனினும், ஆவிக்குரிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில், என்ன கிடைக்கும்? என்ற கேள்வி அவர்களை எதிர்முனையை நோக்கி திருப்பிவிடுவதோடு, எதிரிகளிடமே அவர்களைக் கொண்டு சேர்த்துவிடும்; அத்துடன், பிசாசுக்கு இடங்கொடுக்கவும் செய்துவிடும். என்ன கிடைக்கும்? என்ற கேள்வி இடையில் எழும்பினதினால், ஆவிக்குரிய ஓட்டத்திற்கே விடைகொடுத்துவிட்டவர்கள் உண்டு.   

பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்;: நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான் (மத். 26:14-16). சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு (யோவான் 13:2) என்றும், திருடனானபடியினால் என்றும் (யோவான் 12:6) யூதாஸைக் குறித்து வாசிக்கின்றோமே. மேலும், முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றும், தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றும் (யோவான் 13:10,11) யூதாஸைக் குறித்து இயேசு கிறிஸ்து எடுத்துரைத்தாரே. பிசாசானவன் யூதாஸின் இருதயத்தைத் தூண்டினபின்பும், யூதாஸின் கால்களை இயேசு கிறிஸ்து கழுவினது எத்தனை மேன்மையானதோர் மாதிரி. வெளிப்படையாக யூதாஸின் கால்கள் கழுவப்பட்டபோதிலும், அவனது அந்தரங்கக் கறைகளோ அப்படியேதான் இருந்தது. என்ன கிடைக்கும் என்று கேட்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்துவிட்டானே (யோவான் 13:27). சீஷன் என்ற ஸ்தானத்தையே இழக்கச் செய்துவிட்டானே. (அப். 1:24)

பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான் (மத். 19:27). ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத். 19:23) என்று இயேசு கிறிஸ்து சொன்னதும், 'தன்னுடைய தியாகத்தைச் சொல்லிக்காட்டிவிட்டான் பேதுரு.' தியாகத்தைச் சொல்லிக்காட்டினதோடு மாத்திரமல்லாமல், தியாகத்திற்கு ஈடாக என்ன கிடைக்கும்? என்ற கேள்வியையும் முன் வைத்துவிட்டான் பேதுரு. தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து சொல்லத் தொடங்கினபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்கு சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் (மத். 16:22,23). 'எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்ட பேதுருவுக்குள் சாத்தான் புகுந்துவிட்டானே. என்ன கிடைக்கும்? என்று கேட்ட பேதுரு,  வேலைக்காரி தன்னைக் காட்டிக்கொடுத்தபோது, 'நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது' என்று எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தானே. அதுமாத்திரமல்ல 'அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினானே.' (மத். 26:70,74)

அனனியாவும் சப்பீராளும் தங்களது காணியாட்சியை விற்றபோதிலும், எல்லாவற்றையும் அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்துவிட்டால், தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணியதினாலேயே, கொஞ்சத்தை மனைவி அறிய எடுத்துவைத்தான் அனனியா. பேதுரு அவனை நோக்கி: சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? என்று கேட்டானே (அப். 5:1-3). தனக்கென்று சிலவற்றைத் தப்பவைத்ததினால் சவுலும், ஆகானும் பாவஞ்செய்தார்களே (1சாமு. 15:9, யோசு. 7:1). என்ன கிடைக்கும் என்ற வலையில் நாம் மாட்டிக்கொண்டால், விட்டுவந்தவைகளையே மீண்டும் தொடரும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம்; பின்னோக்கிய பயணத்தில் பிசாசும் உடன் வந்து ஒட்டிக்கொள்ளும் நிலை உருவாகிவிடும்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...