Skip to main content

பதிலடி

பதிலடி

 

அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். (யோவா 16:2,3)

இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, 'பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்றார் (லூக். 23:34). தன்னை யார் என்று அவர்கள் அறியாததினாலேயே தன்னை இத்தனை உபத்திரவங்களுக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் வார்த்தைகள் அவைகள். 'என்னை அனுப்பினவரை அறியாதபடியினால், என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்' (யோவான் 15:21) என்கிறார் இயேசு. அவர் உலகத்திலிருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை (யோவான் 1:10). தன்னைச் சுற்றி நின்ற ஜனங்களைப் பார்த்து, 'பிதாவை நீங்கள் அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்' (யோவான் 8:55) என்றார் இயேசு. இதையே தனது வேண்டுதலின் சமையத்திலும் இயேசு திரும்பக் கூறுகின்றார். 'நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்' (யோவான் 17:25). 'உம்முடைய பிதா எங்கே?' என்று பரிசேயர் இயேசுவினிடத்தில் கேட்டபோது, இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள்' என்றார் (யோவான் 8:19).இதே பதிலேயே இயேசு பிலிப்புவுக்கும் கொடுத்தார், 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்' (யோவான் 14:9) என்றார். இதன் அர்த்தம் என்ன? தன்னைக் காணாமல் பிதாவைக் காண முடியாது என்பதே. அதை விளக்கும் வண்ணமாகவே, 'நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்' என்றும் சொன்னார் (யோவான் 14:6).

இயேசுவை யார் என்று அறிந்துகொள்ள இயலாததினால், பிதாவையும் யார் என்று அவர்களால் அடையாளம் கண்டுகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ இயலவில்லை. தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோவான் 1:18) என்றாலும், இயேசு வெளிப்படுத்திய பிதாவை பார்க்க இயலவில்லை. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி 4:4). மாம்சீக கண்களால், முன்னே நிற்கும் இயேசுவை முகமுகமாய்க் காணும் பாக்கியத்தினைப் பெற்றிருந்தபோதிலும், அவர்களுடைய ஆவிக்குரிய ஆன்மீகக் கண்களையோ சத்துரு அடைத்துவைத்திருந்தான். ஆன்மீகக் கண்கள் குருடாயிருந்ததினால், முன்னே நின்ற இயேசுவை ஆண்டவர் என்று அவர்களால் அறிந்துகொள்ள இயலவில்லை. தேடிச் சென்ற தெய்வம், முன்னே வந்து நின்றும் தெய்வத்தை தெய்வமாக ஏற்றுக்கொள்ளாமலிருந்தது எத்தனை கொடுமை. அதனாலேயே, அவருடனே இருந்த பரிசேயரில் சிலர், 'நாங்களும் குருடரோ?' (யோவான் 9:40) என்று கேள்வி கேட்டனர்.

இயேசுவை வெறுத்துவிட்ட கூட்டம் இன்றும் பிதாவைத் தேடித் தேடி அலைகிறது. எங்கே பிதா? எதிலே பிதா? என்ற அவர்களது கேள்விகளுக்கு அவர்களிடத்திலேயே பதில் இல்லாத நிலையிலேயே அவர்கள் வாழ்வதற்குக் காரணம், வழியாக வந்த இயேசுவை அவர்கள் அறியாததே. ஏதோ வேறொரு மார்க்கமாய், பிதாவைச் சென்றடைந்துவிடலாம் என்று அவர்கள் தீட்டும், உலகத்தரமான, மாம்சீகமான, மாய்மாலமான, தங்கள் சுய எண்ணத்திற்குட்பட்ட அத்தனையும் பொய்த்துக்கொண்டேயிருக்கின்றது; இயேசுவை மறுதலித்துவிட்டு, பிதாவை மட்டும் பேசிப் பேசி பொய்த்துப்போன ஓர் பொய்ளான உலத்திற்குள் அவர்கள் தங்களை அடைத்துக்கொண்டார்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்; (2யோவா 1:9) என்பதே அப்போஸ்தலனான யோவான் நமக்கு வெளிப்படுத்தி எழுதும் சத்தியம்.

'பிதாவையும் என்னையும் அறியாதபடியினாலேயே' இயேசுவையும், இயேசுவைச் சார்ந்தோரையும் கொலைசெய்துகொண்டிருக்கிறது ஓர் கூட்டம். அவர்கள் கொலைகாரர்களாக மாறியதற்கான காரணம் இதுவே. அவர்களுக்குப் பிதாவைத் தெரியும், பிதா எழுதிக்கொடுத்த பல சட்டங்களைத் தெரியும், தங்களது முற்பிதாக்களை பிதா நடத்திவந்த பாதைகளும் தெரியும், பிதா இவ்வுலகத்தில் செய்த பலவிதமான அற்புதங்களும் தெரியும், பிதா இவ்வுலகத்தில் தனது ஜனங்களை வழிநடத்த உபயோகப்படுத்திய பலதேவ தாசர்களையும் தெரியும், தீர்க்கதரிசிகளைத் தெரியும், ராஜாக்களைத் தெரியும், ஆசாரியர்களைத் தெரியும்; ஆனால், 'இயேசுவைத் தெரியாது'. இயேசுவை அவர்களுக்கு 'மேசியாவாகத்' தெரியாது, தீர்க்கதரிசியாகவே தெரியும். இயேசுவும் பிதாவும் ஒன்றென்ற சூத்திரம் தெரியாது. இயேசு உயிர்த்தெழுந்து பரமேறிப்போனதை அறியாமலும், அதன்மேல் நம்பிக்கையில்லாமலும் ஓடிக்கொண்டிருக்கின்ற கூட்டம் அது. இயேசுவுக்கு விரோதமாக அன்று பரிசேயரும், பிரதான ஆசாரியரும் கூட்டம் கூடி, இயேசுவை கொலை செய்ய திட்டம் தீட்டியதுபோல, இன்று இவர்கள் இயேசுவைப் பின்செல்லுவோருக்கு விரோதமாகத் திட்டங்களைத் தீட்டி அவர்களைக் கொலை செய்துககொண்டிருக்கின்றனர். 'இப்பிதாஹீம்' என்பார்கள் 'மூசா' என்பார்கள், இன்னும் பல்வேறு பழைய ஏற்பாட்டு வேத நிகழ்வுகளைக் குறித்தும் பேசுவார்கள்; ஆனால், என்ன பிரயோஜனம், நியாயப்பிரமானத்தின் முடிவாக வந்த 'இயேசு' தெரியாமற்போய்விட்டதே. இயேசுவை அறிவிப்பவர்களையும், இயேசுவை ஏற்றுக்கொள்பவர்களையும் கொலை செய்யும் அவலம் ஆகிவிட்டதே. சரீரத்தைச் சுக்குநூறாக்கும் பல சட்டதிட்டங்களை வகுத்துவைத்துக்கொண்டு, சத்தியத்தை கைவிட்டுவிடுபவர்கள் இவர்கள். 'உனக்காக நான் மரித்தேன்' என்று சொன்ன இயேசு வந்தபின்னும், 'உனக்காகவும், உனது பாவங்களுக்காகவும் நீதான் மரிக்கவேண்டும்' என்று மனிதனுடைய வாழ்க்கையில் மரணத்தைத் திணிப்பவர்கள். ஜீவனைக் காக்க வந்த இயேசு இவர்கள் கண்களுக்குத் தெரியாமற்போனது ஏனோ? தீர்க்கதரிசியாக தாங்கள் ஏற்றுக்கொள்ளும் இயேசுவை, தேவனாக, பிதாவின் குமாரனாக கிறிஸ்தவர்கள் போற்றிப் புகழுவதை சகிக்க இயலாமற் போனதினாலேயே சதிநாசவேலைகளில் அவர்கள் ஈடுபட்டதற்கான அடிப்படை அஸ்திபாரம். அல்லாவைத் தெரியும், அவர் நினைவாக தலையில் குல்லாவையும் அணிவோம் ஆனால், அவரது குமாரனாக இயேசுவை ஏற்றுக்கொள்ள முடியாது, மேசியாவாக அவரை மேன்மைப்படுத்த முடியாது என்று தங்களுக்குத் தாங்களே நீதிகேடு இழைத்துக்கொள்ளும் கூட்டத்தினர் அவர்கள். விருத்தசேதனம் விடப்பட்டுவிட்ட இக்காலத்திலும், விருத்தசேதனத்திற்காக தங்களை விற்றுப்போட்டவர்கள். ஆண் குழந்தை மாத்திரமல்ல, பெண் குழந்தைகளுக்குள்ளும் அதனைத் திணித்தவர்கள். 

'யெகோவா' என்ற பெயரில் முளைத்தெழும்பி நிற்கும் பல சபைகளுக்கு 'இயேசு'வைத் தெரியாமற்போனது எத்தனை அவலட்சணம். 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்' (யோவான் 10:30) என்றார் இயேசு, ஆனால், இவர்களோ பிதாவின் ஒரே பேறான இயேசுவையே பிதாவை விட்டுப் பிரித்து, பிதா, பிதா என்று சொல்லிக்கொண்டிருக்கிறவர்கள். நியாயப்பிரமானத்தோடு ஒட்டி வாழ்ந்து, இயேசுவின் நீதியை விட்டுவிட்டவர்கள். பழைய ஏற்பாட்டுக் காலத்தின், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கல்லெறிதல், தூக்கிலிடுதல் போன்ற இரக்கமற்ற செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம் அவர்கள் வாழ்க்கையில் இயேசு இல்லாததே. புதிய ஏற்பாட்டைத் தொட்டிருந்தால் அவர்கள் வாழ்க்கை புதிதாகியிருக்குமே. 'ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' (2கொரி. 5:17) என்றல்லவா எழுதுகின்றார் பவுல். வாழ்க்கையைப் புதிதாக்க வழியாக வந்த இயேசுவை விட்டுவிட்டதினால், பிறரது வாழ்க்கையை அழிக்கும் நிலைக்கு பிசாசு அவர்களைத் தள்ளிவிடுகின்றான். யோவானையும் 'பிசாசு பிடித்திருக்கிறவன்' (மத். 11:18) என்றார்கள்; இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோதும், இவன் பிசாசு பிடித்தவன்' (யோவான் 10:20) என்றார்கள். யாரை பிசாசு ஆண்டுகொண்டிருகு;கிறான், எந்தக் கூட்டத்தினர் பிசாசின் ஆதிக்கத்திக்குட்பட்டிருக்கின்றனர், எந்தக் கூட்டத்தினர் மாம்சத்தின் வழியில் போய்க்கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாமல், தங்களுடைய கண்களில் இருக்கும் உத்திரத்தை உணராமல், அடுத்தவருடைய உயிரை எடுக்கும் கூட்டத்தினர் இவர்கள். பொல்லாத ஆவிகளே 'இயேசுவை அறிவேன்' என்றும் (அப். 19:15), 'இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே' (மாற். 5:7) என்றும் அடையாளம் கண்டுகொண்டிருந்தன; ஆனால், அவைகள் பிடித்துவைத்திருந்த மனிதர்களுக்கோ அந்த அறிவைக் கொடாமல் அவைகள் மறைத்துவைத்திருந்தன. இயேசுவை 'பெயல்செபூல்' என்று (மத். 10:25) என்று சொன்ன ஜனங்கள்; அவர் பிதாவின் குமாரன் என்றறியாமற் போனது பரிதாபமல்லவோ.

பிதாவையும், இயேசுவையும் சேர்த்தறியாத மக்கள் உங்களைத் துன்பப்படுத்தும்போது, சோர்ந்துவிடவேண்டாம். அவர்கள் நம்மை பிதாவினிடம் அனுப்புபவர்களாக இருக்கலாம், ஆனால், அவர்கள் பிதாவினிடம் வரவோ அவர்களும் நம் வழியைத்தான் தெரிந்தெடுக்கவேண்டும். பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் இரண்டு கள்ளர்கள் இயேசுவுடன் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் கள்ளர்களில் ஒருவன் மனம் திருந்தியவனாக இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்' (லூக். 23:42) என்று வேண்டிக்கொள்வதற்கு முன்னமே, இயேசு தன்னை அறியாத ஜனங்களுக்காக பிதாவிடம் வேண்டிக்கொண்டார்; இதுவே இன்று, துன்பப்படுத்தப்படும் நாமும் செய்யவேண்டிய காரியம்.

கிறிஸ்துவுக்காக தொண்டு செய்ய தன்னை அர்ப்பணித்தவர்கள், துன்பங்களைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. பச்சை மரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் (லூக். 23:31) என்று எதிர் நிற்கும் பாடுகளை தன்னுடைய சீடர்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்தார் இயேசு. மேலும், தனது உபதேசத்தின் தொடக்கத்திலேயே, 'துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது' (மத். 5:10) என்றும், என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் (மத். 5:11) என்றும் சொல்லி, துன்பங்களைச் சந்திக்கும்போது ஒடிவிடாமல், அதைச் சந்திக்க பெலனுள்ளவர்களாகவே தன்னைப் பின்பற்றுவோரை மாற்றினார் இயேசு. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே (மத். 5:12) என்ற இயேசுவின் போதனை, ஏதோ நாம் மாத்திரமல்ல, நமக்கு முன் நடந்தவர்கள் சந்தித்த துன்பங்களிலேயே நாமும் பங்கடையப் போகிறோம் என்பதை உணர்த்துகின்றது. பத்மு தீவில் யோவானுக்குக் கிடைத்த பரலோகத்தைப் பற்றிய வெளிப்படுத்துதல், இப்புவித் தீவில் நமக்கும் கிடைக்கட்டும்; தைரியம் கொள்ளுங்கள்.

துன்பங்கள் நம்மை கிறிஸ்துவை விட்டு விலகச் செய்துவிடக்கூடாது. அவரை விட்டுப் பிரித்துவிடக்கூடாது என்பதே துன்பத்தை நாம் சந்திக்கும்போது எடுக்கவேண்டிய முதல் தீர்மானம். அதுவே நமது வெற்றியை நிர்ணயிக்கும்; யோபுவை நினைத்துக்கொள்ளுங்கள்; கொலை செய்யப்பட்ட பேதுருவை நினைத்துக்கொள்ளுங்கள்; இவர்களெல்லாம் அப்படிப்பட்ட முடிவு எடுத்திருந்ததினாலேயே, துன்பங்களை ஜெயித்தார்கள். பவுலும் இத்தகைய முடிவை எடுத்திருந்ததினாலேயே, துன்பங்களைச் சந்தித்தபோதும் தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டிருந்தார். உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:39) என்கிறார் பவுல். துன்பங்களோ, பாடுகளோ, உபத்திரவங்களோ, பின்னும் மற்றெந்த கஷ்டங்களோ வாழ்க்கையில் உண்டாகும்போது, கிறிஸ்துவைப் பின்தொடர்ந்து செல்லும் வழியில் நமக்கு வலியாக மாறும்போது, அவைகள் நம்மை கிறிஸ்துவை விட்டுப் பிரித்துவிடக்கூடாது என்பதே பிரதானமானது. வியாதி தீராவிட்டாலோ, வேலை கிடைக்காவிட்டாலோ, உணவு அற்ற நிலையிலோ, திருமணம் நடக்காவிட்டாலோ, குடும்பத்தின் வறுமையான சூழ்நிலைகளின் மத்தியிலோ, தொடர்ந்து நிகழும் எதிர்ப்புகளினாலோ எனக்குள் இருக்கும் கிறிஸ்துவை நான் நிச்சயம் இழக்கமாட்டேன் என்பதே நீங்கள் எடுக்கவேண்டிய முதல் தீர்மானம். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன் (ஆபகூக் 3:17,18) என்ற தீர்க்கதரிசியின் வார்த்தையை எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் எதிர்பார்;த்திருந்தவைகள் நடக்கவில்லை, வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் தீரவில்லை என்று கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து ஆங்காங்கே ஆறுதலைத் தேடியலைவோராக நாம் காணப்படக்கூடாது. நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்பிப்பீர் (சங். 138:7) என்பதல்லவோ சங்கீதக்காரனின் வரிகள். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது (ஏசாயா 43:2) என்பதுதான் கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம். தானியேலையும், அவன் சகோதரர்களையும் நினைத்துக்கொள்ளுங்கள். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான் (யோவா 10:13) என்று மேய்ப்பர்களை அடையாளம் கண்டுகொள்ளும்படி இயேசு போதித்த வார்த்தைகளைக் கொண்டு நம்மையும் அடையாளம் கண்டுகொள்ளமுடியுமே. ஏதாவது கிடைக்கும் என்று கூலிக்காக நாம் ஆண்டவரைத் தேடி வந்துகொண்டிருப்பவர்களாக இருப்போமென்றால், ஓநாய்கள் (துன்பங்கள்) வரும்போது ஓடிவிடுவோம். என் நாமத்தினிமித்தம் அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்குள் (லூக். 21:12) என்பது நமக்காக எழுதப்பட்ட வரிகளே. 'அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்' (யோவான் 15:20) என்று சொன்னதை மறந்துவிடவேண்டாம்.

இஸ்லாமிய நாடுகளில், கொடுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களால், கிறிஸ்துவை மறுதலித்திருக்கமுயும் என்றாலும், மறுதிலிக்காமல், மறுமைக்குள் பிரவேசிப்பதையே அவர்கள் தெரிந்துகொண்டதால், தலை அறுக்கப்பட்டும், சுடப்பட்டும், சுட்டெரிக்கப்பட்டும் தங்கள் ஆவியை பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்; இந்த நிலை உங்களுக்கு உண்டாகுமென்றால், நீங்கள் மறுமையின் பக்கமா அல்லது மறுதலிப்பின் பக்கமா? இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர், ஈராக் தேசத்தில் கிறிஸ்தவர்களின் தலைகளை வெட்டி வீதிகளில் அவைகளை கால்பந்தாக உதைத்து விளையாண்டுகொண்டிருந்ததையும், தங்கள் பிள்ளைகளையும் அப்படி விளையாடும்படி உற்சாகப்படுத்தியதையும் இணையதளத்தில் கண்டேன். அத்தோடு, தீவிரவாதி ஒருவன் தன்னுடைய ஏழு வயது நிரம்பிய மகனது பிஞ்சுக் கரங்களில் துப்பாக்கியினைக் கொடுத்து சுடக் கற்றுக்கொடுத்த வீடியோ காட்டியினையும் பார்த்தேன். கிறிஸ்தவர் ஒருவரை நிற்கச் செய்து, ஆடு அறுப்பதைப் போன்று அவரது கழுத்தை அறுக்கும் காட்டியினையும் கண்டேன். வாலிபப் பெண் ஒருத்தியை தீவிரவாதிகள் நான்குபேல் அழுத்திப் பிடித்திருக்க, ஒவ்வொருவராக அந்த கிறிஸ்தவப் பெண்ணைக் கற்பழிக்கும் காட்சியை கண்டேன். நம்முடைய உள்ளம் குமுறும்படி இணையதளத்தில் காணக்கிடக்கும் இக்காட்சிகள் நம்மை பயமுறுத்துவதற்கு அல்ல, நம்மை பெலப்படுத்துவதற்கே. ஒருபுறம் தீவிரவாதத்தினால், கிறிஸ்தவர்களை கிறிஸ்துவை விட்டுப் பிரித்துவிடவேண்டும் என்று தீவிரவாதிகள் எத்தணித்துக்கொண்டிந்தாலும், கிறிஸ்தவர்கள் மறுமைக்குள் அவர்கள் பிரவேசிக்க எப்போதும் ஆயத்தமாயிருப்பவர்கள் என்பதே நாம் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கும் பதிலடி. மறுமையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் நம்மை அவர்கள் தங்கள் விரல்களால் தட்டிவிட்டாலென்ன? அறிவாளால் வெட்டிவிட்டாலென்ன? துப்பாக்கியால்தான் சுட்டுவிட்டாலென்ன? சொர்க்கம் நம் பக்கம் என்பது நாமறிந்தது; அவர்களோ அறியாதது.

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டு மென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ (மத் 5:39-41). இயேசுவின் இச்சத்தியத்தையே, சட்டத்தைப் போன்று, உன் சத்துருபசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய் (ரோம 12:20) என்று பவுலும் எழுதிவைத்துச் சென்றார். ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி, யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலை செய்தான் (அப். 12:1.2); அப்படியே, பவுலும் பர்னபாவும் துன்பப்படுத்தப்பட்டார்கள் (அப். 13:50). உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள் (ரோம 12:14) என்றும், எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம் (1கொரி 4:12) என்றும் பவுல் எழுதிய வரிகள் நமது இன்றைய பாடமாகட்டும். அப்போஸ்தலர்களில் பலர் அறுக்கப்பட்டதையும் சரித்திரத்தின் வரிகள் பதிவுசெய்துள்ளன.

இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்னதாக சவுலை சத்துரு துன்பப்படுத்துவதற்காகவே பயன்படுத்திவந்தான். புருஷரையும், ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் அவர்களைத் துன்பப்படுத்தினான் சவுல் (அப். 22:4). சகல ஜெப ஆலயங்களிலும் இருந்த ஜனங்களைத் தண்டித்து, தேவதூஷனஞ் சொல்லக் கட்டாயப்படுத்டதினான்; மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நிய பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினான் (அப். 26:11). ஆனால், இயேசுவைச் சந்தித்த பின்னரோ, துன்பப்படுத்தப்படுவதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டான். நாம் எந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். துன்பப்படுத்துகிறவர்களாகவா? அல்லது துன்பப்படுத்தப்படுகிறவர்களாகவா? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதிலும், இரட்சிக்கப்பட்டுவிட்டேன், அபிஷேகம் பெற்றுவிட்டேன், ஊழியம் செய்துகொண்டிருக்கிறேன் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்கின்றபோதிலும், தங்களது மாய்மாலமான வாழ்க்கையினால், இன்னும் பலர் ஜனங்களைத் துன்பப்படுத்துகிறவர்களாகவே காணப்படுகின்றனர்.

உன்னை உலகறியச் செய்யும் : நமக்கு உண்டாகும் துன்பம் நம்மையும், நாம் சுமந்து செல்லும் சுவிசேஷத்தையும் உலகறியச் செய்யும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். உடைக்கப்படாமலிருக்கும் ஓர் பாறை அல்லது திறக்கப்படாமலிருக்கும் ஓர் அறைக் கதவு; இவைகளைத் திறக்க தேவன் துன்பங்களை நமது வாழ்க்கையில் அனுமதிக்கலாம். திறமைகள் பல இருந்தும், தாலந்துகள் பல இருந்தும், அழைப்பு இருந்தும் அசையாமல் இருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறவர்கள் பலர் உண்டு. எந்த ஊழியர் வந்து பிரசங்கம் பண்ணினாலும், எந்தெந்த சபைக்குச் சென்றாலும், எத்தனை கூட்டங்களில் பங்கெடுத்தாலும் அவர்கள் அசைவதில்லை. இருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம். ஆனால், தேவனோ, அவர்களை வெளியேற்ற விரும்புகிறார், தன்னை அவர்கள் உலகத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று விரும்புகிறார். இந்த தேவவிருப்பத்துக்கு விரோதமாக அவர்கள் விரும்பும்போது, துன்பங்களினால் அவர்களை உடைத்து அவர்களை உலகத்திற்குள் அனுப்பலாம்.

எருசலேமிலுள்ள சபையில், அநேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுவந்தனர்; அப்போஸ்தலர்களின் போதகத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்ந்துவந்தனர். என்றாலும், அப்போஸ்தலர்களின் பாதத்தருகே உட்கார்ந்திருந்து போதகத்தைக் கேட்பதையே தங்கள் வழக்கமாக்கிக்கொண்டனர். சபை சீடர்களை ஆயத்தம் செய்யும் இடம் அவ்வளவே; ஆனால், இன்றைய சபைகள் சீடர்களை திறம்பட, வலுமையாக ஆயத்தம் செய்துகொண்டிருக்கும்போதும், அவர்களை வெளியே விட மனதில்லாதிருக்கிறது. தன்னுடைய சபையினை விட்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. உலகத்திற்குள் அவர்கள் செல்லாமல் தங்கள் சபைக்கு உள்ளேயே சுற்றிக்கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். எத்தனையோ வலிமையுள்ள பாத்திரங்கள் பல, உபயோகப்படாமலேயே சபைகளில் கிடப்பது வருத்தத்திற்குறியதே. எருசலேமிலுள்ள சபைக்கு துன்பம் உண்டானபோது, அப்போஸ்தலர்களைத் தவிர, மற்ற யாவரும் யூதேயா, சமாரியா தேசங்களில் சிதறிப்போனார்கள் (அப். 8:1).

ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் இயேசு (மத். 10:23). இயேசுவின் இந்த போதனை நமக்கு எடுத்துச் சொல்லும் சத்தியம் என்ன? 'சுவிசேஷத்தை அறிவிப்பதே' நமது முதல் நோக்கமாயிருக்கவேண்டுமென்பதுதான். எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் (மத் 10:14) என்று கற்றுக்கொடுத்தார் இயேசு. இதனை அப்போஸ்தலர்கள் பின்பற்றினர், பவுலுக்கும், பர்னபாவுக்கும் விரோதமாக எழுந்து, அவர்களைத் துரத்திவிட்டபோது, 'அவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்' (அப். 13:51). ஸ்தேவானின் பிரசங்கத்தைக் கேட்டபோது, மூக்கமடைந்து, பல்லைக் கடித்து, கல்லையும் எடுத்துவிட்டனர், அந்த இடத்தில் ஸ்தேவான் தன் ஆவியை ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டது (அப். 7:54-59). இயேசுவும், தன்னை ஏற்றுக்கொள்ளாத இடத்தை விட்டு தன்னை அறிந்துகொள்ளாத மக்களை நோக்கிப் பயணித்துக்கொண்டேயிருந்தார். பிசாசு உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோனது போல (மத். 4:8), இயேசுவை ஏற்றுக்கொள்ளாத ஜனங்களும் அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள் (லூக். 4:29); ஆனால், இயேசுவோ, அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார் (லூக். 4:30). அவரது பயணத்தின் இறுதியிலேயே, நியமிக்கப்பட்ட வேளையிலேயே தனது ஜீவனை விட்டார்.

இந்தச் செய்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது, எனது நினைவில் மலையாளப் பாடல் ஒன்று வந்தது. நான் இளைஞனாக இருந்தபோது, அந்தப் பாடலை விருப்பமுற்று அடிக்கடி பாடி மகிழ்ந்திருக்கிறேன். அந்தப் பாடலை முழுவதும் அறியாதபோதிலும், இணையதளத்தில் அதனைத் தேடிக் கண்டுபிடித்தேன்; மீண்டும் கேட்டு ஆனந்தமடைந்தேன், நீங்களும் ஒருமுறை கேட்க விரும்பினால் https://www.youtube.com/watch?v=h8yW5-pWRb8 என்ற தொடர்பில் கேட்டு மகிழுங்கள்.


சம்பல்லா தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
அன்பருடனே இன்பமாய் ஏற்போம்

புறப்பட்டுப் போகக்கடவோம்
இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்
வாசலுக்குப் புறம்பே போவோம்

கள்ளச் சகோதரர் கைவிடுவார்கள்
பொல்லாதவைகளைச் சுமத்திடுவார்கள்
நல்லக் கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்

புறப்பட்டுப் போகக்கடவோம்
இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்

வாசலுக்குப் புறம்பே போவோம் 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி