Skip to main content

தூரமாயிருக்கும் துணை

 

தூரமாயிருக்கும் துணை




உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புகொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. (உபா. 23:14)


அவர் காட்டும் திசையினை நோக்கி பயணித்தால் மாத்திரம் போதாது; அசுத்தங்களோடு பயணத்தைத் தொடருவது பயணிகளுக்கே பாதுகாப்பற்றது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், கானானுக்குச் சென்று சேரும் முன், வழியிலேயே பிணங்களாக நாம் வீழ்ந்துவிடக்கூடாதே. எள்ளளவு பாவமும், உள்ளான மனிதனைக் கொன்று ஆவிக்குரிய உயிரைக் குடித்துவிடும் பெலனுள்ளது; எனவே, எச்சரிக்கையோடு பயணித்தால் மாத்திரமே ஆவிக்குரிய மூச்சை நாம் காத்துக்கொள்ள முடியும். 

கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஒடுகிற தேசத்துக்குப் போங்கள் என்று சொன்னதோடு, நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன் என்றும் கூறினார் (யாத். 33:1-2). அழைப்பின் திசையினை நோக்கி அனுப்புவதும், பயணத்திற்கான பாதுகாப்பினை அளிப்பதும் அழைத்தவரது பொறுப்பே. வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத். 23:20) என்றும், நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு 

விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன் (யாத். 23:22-23) என்று அவர் வாக்குபண்ணியிருக்கிறாரே. யாக்கோபின் பிரயாணத்தின்போதும், தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருந்தார்களே (ஆதி. 28:12). அதுமாத்திரமல்ல, அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி. 28:15) என்றும் வாக்குக்கொடுத்தாரே. என்றபோதிலும், இஸ்ரவேல் ஜனங்களை அனுப்பியபோது, 'ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் (யாத். 33:3) என்று தன்னையே தடுத்து நிறுத்திக்கொண்டார். ஜனங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்றும், பிரயாணம்பண்ணவேண்டும் என்றும் விரும்பினபோதிலும், அவர்கள் நிர்மூலமாகிவிடாதபடி தன்னையே நீக்கிவைத்துக்கொள்ள விரும்பினார் தேவன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புல 3:22)

என்று எழுதப்பட்டிருந்தபோதிலும், அவர் உடனிருந்ததால் நிர்மூலமாகிவிடும் நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களும் உண்டு. எனவே, அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை (யாத். 23:21). இதனையே தாவீதும் எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? (சங். 60:10) என்று எழுதுகின்றார்; என்றபோதிலும், அவரது பாதுகாப்பினை பதிவு செய்ய மறக்கவில்லையே (சங். 60:11,12). உடன்வர விரும்புபவரை உதறிவிடவேண்டாம் (உபா. 32:12). 

ஜனங்களைப் பரிசுத்தப்படுத்து என்று மோசேயைப் பார்த்துச் சொன்ன தேவன் (யாத். 19:10), அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான் (யாத் 19:12) என்றும் எச்சரித்தாரே. பரிசுத்தமின்மையால், பலியாகிவிடக்கூடாது என்பதற்காக விதிக்கப்பட்ட பாதுகாப்பின் கட்டளைதானே அது. பிரயாணத்திற்கான பாதுகாப்பினை பிற பரிசுத்தவான்கள் மூலமாக வழங்கிவிட்டு, நம்முடைய வாழ்க்கை அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்  தூரத்தில் நின்றுகொண்டிருக்கக்கூடும். பாதுகாப்பினை பிறர் மூலமாய் அல்ல பிதாவின் முன்னிலையிலேயே பெற்றுக்கொள்ளும் பிள்ளைகளாக மாறுவோம்.


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...