Skip to main content

புளித்த மா



புளித்த மா




பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். (மத் 16:6)


நம்முடைய ஆத்துமாவை நாம் காத்துக்கொள்ளவேண்டுமென்றால், நம்மைச் சுற்றி நிற்கும் ஆபத்துக்களைக் குறித்த அறிவும் நமக்கு இருக்கவேண்டும். சீஷர்களுக்கு இயேசு கொடுத்த எச்சரிக்கைகளில் ஒன்று, 'புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும்' என்பது. பரிசேயர் மற்றும் சதுசேயரின் உபதேசத்தினையும் 'புளித்தமா'வுக்கு ஒப்பிடுகின்றார் (மத். 16:6); அப்படியே, பரலோக ராஜ்யத்தையும் இயேசு 'புளித்தமா'வுக்கு ஒப்பிடுகின்றார் (லூக். 13:21). இவ்விரண்டின் வித்தியாசத்தையும், இவ்விரண்டும் நமது வாழ்க்கையில் உண்டாக்கும் வேறுபாட்டினையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும். பரிசேயரின் புளித்த மா நம்மை பாதாளத்திற்குக் கொண்டு செல்லும், பரலோக ராஜ்யம் என்னும் புளித்தமா நம்மை நித்திய ஜீவனுக்குக் கொண்டு சேர்க்கும். நம்முடைய ஆத்துமாவுடன் எந்த புளித்தமா சேருகின்றதோ, அதைப் பொறுத்தே நமது முடிவு நிச்சயிக்கப்படும்.

தவறான உபதேசங்கள், தேவனை விட்டும், வேதத்தின் பாதையை விட்டும் நம்மை தூரப்படுத்திவிடும். எனவே, நாம் போதிக்கிற உபதேசத்தைக் குறித்தும், கேட்கிற உபதேசத்தைக் குறித்தும் கவனமாயிருக்கவேண்டும். வசனத்திற்கு மிஞ்சிய பிரசங்கமும், வேதத்துக்கு ஒவ்வாத சுய வெளிப்பாடும் போதிப்போரையும், கேட்போரையும் கவிழ்த்துவிடுபவைகள். சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளுங்கள் (1கொரி. 4:6) என்று பவுல் எழுதுகின்றாரே. தீர்க்கதரிசனமானாலும், பிரசங்கமானாலும், மற்றெந்த வெளிப்பாடுகளானாலும் வசனம் என்ற வேலியைத் தாண்டிவிடக்கூடாது. தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே (1கொரி. 14:30). நாம் பரிசுத்த ஆவியினால் ஆளப்படுபவர்களாயிருப்போமென்றால், நம்முடைய போதனையும் பரிசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டதாயும், சாரமேற்றப்பட்டதாயும், சத்தியத்தைச் சார்ந்ததாயும் இருக்கும். சத்திய ஆவியானவர் நமக்குள் வந்தால், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் நம்மை நடத்துவார், அவர் இயேசுவினுடைய போதனைகளிலிருந்து எடுத்து நமக்கு அறிவிப்பார் (யோவா 16:15). எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவும், பேசவும் ஆவியானவர் நம்மை அனுமதிப்பதில்லை. நம்முடைய போதனைகளில் புளித்த மா வந்துவிடாமல் இருக்க, இதுவே முதல் படி. நம்முடைய சுய அனுபவங்களோ, சுய பரிதாபங்களோ, சுய பாடுகளோ நம்முடைய பிரசங்க பீடத்தை அதிகம் அலங்கரிக்கும் என்றால், புளித்த மா போதகத்தில் புகுந்துவிடும். வேதத்திலிருந்து எடுத்துப் பேசுகிற ஆவியானவரைத் தள்ளி, நம்முடையதிலிருந்து நாமே எடுத்துப் பேசும் நிலைக்கு நம்முடைய தரம் தாழ்ந்துவிடும்.

அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், இயேசு முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (லூக் 12:1) என்றார். கலாத்தியர் இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கிடந்தார்கள். சுவிசேஷத்தைப் புரட்டும் மக்களால், தடம் புரட்டப்பட்டார்கள். எனவே பவுல், வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் (கலா 1:7,8) என்று கண்டிப்புடன் எழுதுகின்றார். ஆம், கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? (1கொரி 5:6) என்று எதிர்கால ஆபத்தினையும் கொரிந்தியருக்கு பவுல் எழுதுகின்றார். செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும் (பிர 10:1) நம்முடைய தைலம் வாசனை வீசுவதும், நாறிக் கெட்டுப் போவதும். நமக்குள் பிரவேசிக்கும் ஈக்களைப் பொறுத்தது.

நம்முடைய ஆத்துமா, எந்த புளித்த மாவுக்கு இடம்கொடுக்கின்றது? தவறான போதனைகளுக்கு நாம் செவி சாய்ப்போமென்றால், வேதத்திற்கு விரோதமாக நமது வழி சாய்ந்து போய்விடும். நம்மிடத்தில் பேசுவோரின் வார்த்தைகளைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருப்போம். வேதத்திற்கு விரோதமான வார்த்தைகள் நம்முடை ஆத்துமாவில் விழ இடங்கொடுப்போமென்றால், நம்முடைய ஆத்துமா கெட்டுப்போகும். எனவே, பரலோக ராஜ்யத்திற்கடுத்த போதனைகளுக்கு செவிசாய்ப்போம். அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் (லூக் 13:21) என்று இயேசு சொன்னதுபோல, இந்த உலகத்தை முழுவதும் சுவிசேஷ மயமாக்க பரலோக இராஜ்யம் என்னும் புளித்த மாவை நம்முடைய சரீரத்தில் அடக்கிவைத்திருக்கின்றார். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத். 5:14) என்று இயேசு போதித்தது போல, நாம் உலகத்திற்கு 'புளித்தமா'வாக இருக்கின்றோம். புளித்தமாவாகிய நாம் பிற மனிதர்களோடு கலக்கும்போது, அவர்களையும் புளிக்கச் செய்யவேண்டும். அவர்கள் அனைவரும் பரலோகத்தின் ஆத்துமாக்களாக மாறவேண்டும்.











 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி