Skip to main content

வீட்டுக்குப் போகாத வீரன்

வீட்டுக்குப் போகாத வீரன்


யுத்தத்திலிருக்கும் வீரனை வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதே சத்துருவின் குறிக்கோள். வீரனை வீழ்த்த பெலனற்ற சத்துரு, வீரனின் வீட்டுக்குள் நுழைந்து, மாற்றுவழியைக் கையாளுகின்றான். மற்றவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தாங்கள் தப்பித்துக்கொள்ள தீவிரவாதிகள் முயற்சிப்பது போலத்தான். இன்றும், போருக்குப் புறப்படும்  பல வீரர்களை, 'தாழக் குதியும்'  (மத். 4:6) என்று தூண்டி, தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை தாங்களே மாய்த்துக்கொள்ளம்படிச் செய்கிறான்; சிலரையோ, 'நீர் சாஷ;டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொள்ளும்' (மத்.  4:9) என்று உலக ஆசைகளால் உள்ளத்தை நிறைத்து, கைகளிலும் சிலவற்றை அள்ளிக்கொடுத்து அவர்களை புறமுதுகுக் காட்டச்செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான்; 'அப்பாலே போ' (மத். 4:10) என்ற வார்த்தையைச்  சொல்லாததால், அநேகர் அகப்பட்டுக்கொண்டார்கள்.  

உரியா போர்முனையில் நின்றவன்; போருக்குப் போகாத தாவீதின் கண்கள் உரியாவின் வீட்டிற்குள் போய்விட்டன. ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய மனதில்லாதவன், உடனிருக்கும் ஆத்துமாக்களுக்கு ஆபத்தானவன். தாவீது, உரியாவின் மனைவியாகிய பத்சேபாளை முதலில் 'ஆள் அனுப்பி அழைத்துவரச் சொன்னான்' (2சாமு. 11:4);  பின்பு, 'ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு' (2சாமு 11:6) என்று போரிலிருப்பவனை கூப்பிட்டனுப்புகிறான். இன்றும், ஊழியத்தில் நிற்பவர்களின் குடும்பத்தில் முதலில் பிரச்சனைகளை உண்டாக்கி, பின்பு ஊழியம் செய்தது போதும் என்று ஊழியர்களை வீட்டுக்குத் திருப்பி அனுப்ப முயற்சிக்கிறான் சத்துரு. பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போட்டாலும், வீரனோ மீண்டும் பட்டணத்துக்குள்ளேதான் பிரவேசிப்பான். (அப். 14:19,20)  

போர்முனையில் நின்றவனைக் கூப்பிட்டு, நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான் தாவீது. அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது.  ஆனாலும் உரியா தன் வீட்டுக்குப் போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான் (2சாமு 11:9). அவனுக்கு உச்சரிதமானது போர்க்களம்தான்.  

மேலும், உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டிற்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றான் (2சாமு 11:11). வீட்டுக்குப் போ என்றபோது, போகமாட்டேன் என்ற உரியா, போருக்குப் போ என்றதும் உடனே புறப்பட்டுவிட்டான். போரோடு ஒட்டிக்கொண்டிருந்த உரியாவின் மனம் நமக்கு நல்லதோர் பாடம். போருக்கு முக்கியத்துவம் கொடுப்போரின் குணம் இப்படித்தான் இருக்கும். ஒருவேளை நானாக இருந்திருந்தால், போர்க்களத்திலிருந்து வீட்டிற்குப் போய் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு, அதற்குப் பின் அரண்மனைக்குச் சென்றிருப்பேன்.   

அப்போஸ்தலனாகிய பவுலும், புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா? மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? (1கொரி 9:4,5) என்கிறாரே. மனைவியைக் கூடச் சந்திக்காமல், போரிலேயே உயிரை விட்டான் உரியா. எத்தனையோ மிஷனரிகள் இந்தியத் தரையிலே இப்படி உயிர்நீத்ததால்தான் இன்று நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுக்குள் வாழ்கிறது. இத்தகைய அர்ப்பணிப்பு நமக்குள் உண்டா? என்னத்தை உண்போம், குடிப்போம் என்றே கவலைப்பட்டால் நாம் அஞ்ஞானிகளே, முதலாவது தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளைச் செய்தால் மாத்திரமே நாம் தேவ ஞானம் உடையவர்களாகக் கருதப்படுவோம் (மத். 6: 31-34)

தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல (மத் 10:37); என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான் (மத் 19:29) என்ற இயேசுவின் போதனைகளுக்கு உரியா உதாரணமானவன். போருக்கு அழைக்கப்பட்டவனின் உயிர், போர்க்களத்திலேயே போகவேண்டும்.

 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி