Skip to main content

சுவிசேஷகனைத் தடுக்கும் சுவிசேஷகன்

 

சுவிசேஷகனைத் தடுக்கும் சுவிசேஷகன்

 

அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.(லூக் 9:49)


சுவிசேஷம் உலகத்தின் கடைமுனை மட்டும் எட்டவேண்டுமென்றால், சுவிசேஷகர்கள் பெருகவேண்டும். அப்படி பெருகும் சுவிசேஷகர்கள் தன்னலமின்றி தேவநலத்தையே கவனத்தில் கொண்டு தொண்டாற்ற வேண்டும். என்னுடையது, எங்களுடையது என்ற எண்ணத்தைத் துறந்து, நம்முடையது என்ற சூழ்நிலையில் செயலாற்றவேண்டும். ஒருவருக்கு ஒருவர் விரோதமானவர்களாகவும், ஒருவருடையதை மற்றவர் பிடுங்கும் நோக்கத்துடனும் செயல்படாமல், சுவிசேஷப் பணியில் இணைந்து நிற்கும் நாம் ஒருவரே என்ற சிந்தையுடன் பணி செய்யவேண்டும். மாறாக, இன்றய நாட்களில் சில ஊழியர்களை ஊழியங்களுக்கு விரோதமாகவும், ஊழியர்களுக்கு விரோதமாகவும், சபைகளுக்கு விரோதமாகவும், ஜெபக்குழுக்களுக்கு விரோதமாகவும் செயல்பட சத்துரு தூண்டிவிடுவதுடன், ஊழியம் செய்வோரை ஊழியம் செய்யவிடாதபடிக்குத் தடுத்து நிறுத்தவும் அத்தகையோரை ஏவிவிடுகின்றான். சுவிசேஷகர்களாக மாற்றப்பட்ட சீஷர்களுக்கே சுவிசேஷம் அறிவிப்பவனைத் தடை செய்யும் எண்ணம் உருவாயிற்றே. இத்தகைய குணத்திலிருந்து ஊழியர்களாகிய நாம் தப்பிப் பிழைக்கவேண்டும். ஊழியம் கர்த்தருடையது, நம்முடையது அல்ல.

இவர்கள் நம்முடன் இருக்கிறவர்கள் அல்ல 'because he doesn't belong to our group' (லூக். 9:49) என்றே பிசாசு துரத்துகின்ற மற்றவர்களை சீஷர்கள் அடையாளம் சொல்லுகின்றார்கள், அருவருக்கின்றார்கள், தடை செய்கின்றார்கள். நம்முடையவர்கள் அல்ல என்று அடையாளம் சீஷர்களால் அடையாளம் காட்டப்படும் இந்த மனிதன் யார்? இயேசுவின் நாமத்தை உச்சரித்து பிசாசுகளைத் துரத்தும் இந்த மனிதன் யார்? இந்த அதிகாரம் அந்த மனிதனுக்கு கிடைத்தது எப்படி? இந்த கேள்விகள் நம்மை விடையறியச் செய்யட்டும். இயேசு வனாந்தரத்திலும், மலையிலும் மற்றும் ஊரெங்கிலும் போதித்துக்கொண்டிருந்தபோது, சுவிசேஷத்தை அறிவித்துக்கொண்டிருந்தபோது, உபதேசித்துக்கொண்டிருந்தபோது சீஷர்கள் மாத்திரமல்ல, மற்ற மக்களும் அவரது போதகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் சுகமடையவேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவர்கள், இந்த மனிதனோ மற்றவர்களை சுகமாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவன். இயேசுவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது நாமத்தை உச்சரித்தால், பிசாசுகளைத் தானும் துரத்தமுடியும் என்ற நம்பிக்கையை இயேசுவின் போதித்தபோது பெற்றுக்கொண்டவன். சீஷனாக சீஷர்களோடு அவன் காணப்படாவிட்டாலும், இயேசுவின் போதனை அந்த மனிதனை சீஷனாகவும், சுவிசேஷகனாகவும் மாற்றியிருந்தது. இத்தகைய மனிதனையே சீஷர்கள் தடுத்தனர்; எத்தனை வேதனையான காரியம். வியாதியஸ்தர்களை குணமாக்கவும், விடுதலையாக்கவும், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவுமே இயேசு வந்திருக்கிறார் என்று பிரசங்கிக்கிறார்களே, ஆனால், அவருடைய சீஷர்கள் அத்தகைய காரியங்கள் செய்யப்படுவதைத் தடுக்கிறார்களே! என்று இயேசுவின் சீஷர்களை அந்த மனிதன் ஆச்சரியமாகப் பார்த்திருப்பான். ஏன் இப்படி! என்று சீஷர்களின் செயலைக் கண்டு வியந்திருப்பான். பயிற்சி பெற்று சீஷர்கள் பணி செய்யப் புறப்படுவதற்கு முன்னரே, இயேசுவின் போதகத்தைக் கேட்டு புறப்பட்டுவிட்டவன் அவன். 

இன்றைய நாட்களிலும் இத்தகைய காரியங்கள் நடைபெற்றுவருகின்றன. போதகர்கள் அல்லது ஊழியர்கள் மட்டும்தான் இராப்போஜனம் கொடுக்கவேண்டும், போதகர் அல்லது சுவிசேஷகர்கள் மட்டும்தான் ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்று இயேசுவின் போதனையைக் கேட்டு செயல்படத் துடிக்கின்ற தனி ஒரு மனிதனைத் தடைசெய்துவிடுகின்றனர். B.D, M.D, B.Th, M.Th போன்ற படிப்புகளைப் படித்தவர்கள், அத்தகைய படிப்புகளைப் படிக்காதவர்களைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ளாமல் தடைசெய்துவிடுகின்றனர்.ஒரு சில சபைகளில், சபைப் போதகர்கள் நின்று பிரசங்கிக்கும் pரடிவை (பிரசங்க மேடை) சபைக்கு வரும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை; இது நியாயமா, அநியாயம்தானே! பாரபட்சம்தானே! அவர்களைக் காட்டிலும் போதகர்கள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காகத்தானே! இதனால், விரிவடையவேண்டிய சுவிசேஷம் தடைசெய்யப்படுகின்றது. இயேசுவின் சுவிசேஷத்திற்குக் கீழ்;ப்படிந்து, அர்ப்பணித்து, அவர் வழி செல்ல தன்னைத் தத்தம் செய்த எந்த ஒரு மனிதனும், அவரது நாமத்தைப் பயன்படுத்தவும், அவரது நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கவும் அதிகாரம் பெற்றவனே. இத்தகைய மனிதர்களைத் தடுக்கும் கூட்டத்தினர், ஒடுக்கும் கூட்டத்தினர் இயேசுவின் சித்தத்திற்கும், சிந்தைக்கும் எதிர்த்து நிற்பவர்களே. பயிற்சி பெற்று சீஷர்கள் பணி செய்யப் புறப்படுவதற்கு முன்னரே, இயேசுவின் போதகத்தைக் கேட்டு புறப்பட்டுவிட்டவன் அவன். 

இயேசுவையும், இதே நோக்கத்தில்தான் ஜனங்கள் தடை செய்ய எத்த்ணித்தார்கள். இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? (மத். 21:23), இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? (மத் 13:55) இவர் போதகர் அல்லவே, ஆசாரியர் அல்லவே இப்படியிருக்க இவர் இத்தகைய செயல்களைச் செய்யலாமோ? என்று இயேசுவின் செயல்களை முடக்கத் துடித்தனர். சுவிசேஷத்தப் பிரசங்கிக்கும் உரிமையும் மற்றும் இயேசுவின் நாமத்தைச் சொல்லிச் செய்யப்படும் மற்றெந்த காரியங்களும் போதகர்களுக்கு மாத்திரமோ, ஊழியர்களுக்கு மாத்திரமோ சொந்தமானது அல்ல; இயேசுவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் வழி செல்ல தன்னை அர்ப்பணித்த அனைவருக்கும் சொந்தமானது.

இத்தனையாய் மற்றவனைத் தடைசெய்யத் துணிந்து செயல்படும் இயேசுவின் சீஷர்கள், தங்களில் ஒருவன் இயேசுவுக்கு விரோதமாய் இருக்கிறான் என்பதை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல் இருந்தார்களே! எதிரியாய் இருந்தாலும், எங்களுடைய கூட்டத்தில் இருந்தால் அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற அர்த்தமோ! தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். (மத் 23:5-7) என்று இத்தகையோரைத்தான் இயேசு எச்சரிக்கின்றாரோ! சத்துருக்கள் என்ற எண்ணம் அல்லாது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் அனைவரும் நமது சகோதரர்கள் என்ற மனப்பாங்கோடு வாழ்பவர்களே மனந்திரும்பிய சுவிசேஷகர்கள்.

நீ எனக்காக (போதகர்களுக்காக, சுவிசேஷகர்களுக்காக, ஊழியர்களுக்காக) வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே (எண்; 11:29) என்ற மோசேயின் குணம் நம்மிலும் உருவாகட்டும். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...