Skip to main content

விட்டுவிடப்படுவது விவாகத்திற்கே

 விட்டுவிடப்படுவது விவாகத்திற்கே


நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்துவந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. (உபா 24:19)

ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, ஆசீர்வதிப்பவரையே ஆத்தும மணவாளனாக ஆதாயப்படுத்தவே அழைக்கப்பட்டவர்கள் நாம். அவரது வயல்களில் சிந்துபவைகளைப் பொறுக்கிக்கொண்டிருப்பவர்களாக மாத்திரமல்ல, வயலுக்கு எஜமானாகிய அவரையே நமதாக்கிக்கொள்ள ஆயத்தமாகவெண்டியவர்கள் நாம். ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:26) என்ற வசனத்தை வேதத்தில் வாசிக்கும்போதெல்லாம், அதிகமானதோர் நம்பிக்கை நமது உள்ளத்தில் உருவெடுத்தபோதிலும், தனிப்பட்ட விதத்தில் நேரடியாக நமக்கு உபயோகமேதுமில்லாமல், ஊர் ஊராகப் பறந்துகொண்டிருக்கும் அத்தகைய பறவைகளுக்காக நமது விரல்களில் ஒட்டியிருப்பவைகளைக்கூட உதறிவிட மறந்துபோகின்றோம் அல்லது மறுத்துவிடுகின்றோம். எனினும், பறவைகளைப் போல இங்கும் அங்கும் திரிந்துகொண்டிருக்கும் நமக்கு, அவரது கரங்களிலிருந்து விட்டுவிடப்படும் ஆசீர்வாதங்களோ ஏராளமானதல்லவா? அவைகள் அனைத்தும் அவரை நம்முடைய ஆத்தும மணவாளனாகச் சுதந்தரித்துக்கொள்ளவே.  

மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்று சொன்னபோது, நகோமி அவளைப் பார்த்து, என் மகளே, போ என்றாள். அவள் போய், வயல்வெளிகளில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள். அப்போது வயல்வெளிக்கு வந்த போவாஸ் அறுக்கிறவர்களை நோக்கி, 'கர்த்தர் உங்களோடே இருப்பாராக' (ரூத் 2:2-4) என்று அவர்களை ஆசீர்வதித்ததோடு மாத்திரமல்லாமல், தன்னுடைய வயல்வெளியில் அறுக்கிறவர்கள் ஊடே புதிதாக உலாவிக்கொண்டிருக்கும் பெண் ஒருத்தியை அடையாளம் கண்டுகொண்டவனாக, 'அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள்?' என்று கேட்டபோது, அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூட வந்த மோவாபிய பெண்பிள்ளை.அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள். இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான். அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு என்றான் (ரூத் 2:5-8). அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய 'ஒரு மரக்கால்' வாற்கோதுமை கண்டது (ரூத் 2:15-17).

மேலும், 'என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு' என்றும் சொன்னான் போவாஸ். (ரூத். 2:21) 

பொறுக்கிக்கொள்ளும்படியாகக் கதிரைக் கொடுத்த போவாஸுக்காக, தனது மாமியாகிய நகோமியின் ஆலோசனையின்படி, தன்னையே கொடுக்க ஆயத்தமானாள் ரூத். போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான்; அப்பொழுது அவள்: மௌ;ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள். நீ யார்? என்று போவாஸ் கேட்டபோது, 'நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி' என்றாள் (ரூத் 3:7,8). அப்பொழுது போவாஸ் அவளை நோக்கி, 'நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக' என்றதோடு, தன்னையே கொடுக்க ஆயத்தமான அவளுக்கு 'ஆறுபடி வாற்கோதுமையை அள்ளிக் கொடுத்து,  மனைவியாகவும் ஏற்றுக்கொண்டானே.' (ரூத் 3:17; 4:10)

நம்முடைய வாழ்க்கையும் இப்படிப்பட்டதே; எகிப்து என்னும் பாவத்தின் அடிமைத்தனத்தில் அகப்பட்டுக் கிடந்த நாம், கிறிஸ்து என்னும் மணவாளனை அடையாளம் கண்டுகொண்டபோது, அவரது வயல்வெளிகளில் நமக்காக அவரது வேலைக்காரர்களால் அதாவது ஊழியர்களால் சிந்தவிடப்பட்ட அநேக ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படிச் செய்தார்; என்றபோதிலும், பொறுக்கிக்கொள்ளும்படியாக மாத்திரமல்ல அவரது நேசத்தில் பொதிந்துகொள்ளும்படியாகவும், புதைந்துகொள்ளும்படியாகவும் நம்மையே அவருக்காகக் கொடுக்க நாம் ஆயத்தமாகும்போதோ இரட்சிப்பு என்னும் போர்வையால் மூடி 'மணவாட்டி' என்ற மகிமையான ஸ்தானத்திற்குள்  நம்மை இழுத்துக்கொள்ளுகின்றார். 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...