Skip to main content

பாரமும், பாரமும் (2தீமோ. 2:4)

 பாரமும், பாரமும்



போகவேண்டிய இடத்திற்கு நாம் போய்ச்சேரக்கூடாதபடிக்கு, புறமுதுகில் பாரத்தைக் கட்டி, வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஓடிக்கொண்டிருந்த நம்மை நடக்கச்செய்து, நடந்துகொண்டிருக்கும் நிலையிலிருந்தும் ஒரே இடத்தில் நம்மை நிற்கச்செய்துவிட முயற்சிப்பவன் சத்துரு. ஆத்துமாக்களைச் சந்திக்கவேண்டும் என்ற பாரத்தோடு புறப்பட்ட பலர், பாரதோடு ஓட முற்பட்டதால், பாதியிலேயே அவர்களது பரமதரிசனம் பறிபோய்விட்டது. அழைப்பினை நோக்கி ஓடத்தொடங்கின அவர்கள், பல்வேறு அலுவல்களில் சிக்கிக்கொண்டதால் (2தீமோ. 2:4), வலையிலிருந்து வெளியெற இயலாத மீன்களைப்போலவே சில காலம் கடலுக்கு வெளியே கரையிலே காற்றுவாங்கிக்கொண்டிருக் கின்றார்கள்' எனினும், விரைவிலே அவர்களது ஆத்தும பாரம் ஆவியாகிவிடும். 

'எங்கே நாம் அழைக்கப்பட்டோமோ?' அங்கிருந்து நம்மை அகற்ற முயற்சிப்பதுதான் சத்துருவின் முதற்பணி. எனவே எபிரெய ஆக்கியோன் ஆலோசனையாக எழுதும்போது, ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி 12:1) என்று எழுதுகின்றார். 'பொறுமையோடே' என் பதம், மெதுவாக ஓடக்கடவோம் என்று அல்ல, மாறாக 'அவசரப்பட்டு எந்த சுமையையும் தூக்கிவிடக்கூடாமல், ஓட்டத்தைப் பாதிக்கும் காரியங்களில் சிக்கிக்கொள்ளாமல், எதை வாழ்க்கையோடு சேர்த்துக்கொள்ளவேண்டுமோ, அதை மாத்திரமே சேர்த்துக்கொண்டு நிதானமாக பொறுமையுடன் ஓடக்கடவோம்' என்பதையே குறிக்கின்றது. நம்மைப்போல மற்றவர்கள் இந்த காரியத்தைச் கச்சிதமாகச் செய்துமுடித்துவிடமுடியாது என்ற எண்ணத்தில், அநேக காரியங்களை நம்முடைய முதுகில் நாம் மூட்டை கட்டி ஏற்றிக்கொள்ளுகின்றோம்' விளைவு, எதற்காக நாம் அழைக்கப்பட்டேமோ அந்த ஓட்டத்தின் வேகம் தணிந்துபோய்விடும். 

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தபோது, அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல (அப். 6:1,2) என்று திட்டமாய்  சொன்னார்களே. தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான் (நீதி. 27:8) என்று எழுதுகின்றான் சாலொமோன். மற்றவர்கள் கொடுக்கும் ஆலோசனையைக் கேட்டு கூட்டைவிட்டு நாம் வேறெந்த நபராலும் துரத்தப்பட்டவிடவும் கூடாது (ஏசா. 16:2). 

மோசே தனியொருவனாக இஸ்ரவேல் ஜனங்களை நியாயம்விசாரித்துக்கொண்டிருந்தான். ஜனங்கள் காலமே துவங்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள். இதனைக் கண்ட மோசேயின் மாமன், நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்று சொன்னதுடன், நீர் செய்கிற காரியம் நல்லதல்ல, நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்' இது உமக்கு மிகவும் பாரமான காரியம்' நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது (யாத் 18:13-18), பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்' இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும் (யாத். 18:22) என்று சொன்னான். 

இன்றும் இத்தகைய நிலையில் காணப்படும் மனிதர்கள் உண்டு. எல்லாரும் தன்னிடத்தில் வந்தால்தான், தான் 'தலைவன்'' இல்லையேல், அதனைத் தவறவிட்டுவேன் என்ற தவறான மனப்பாங்கோடு, பொறுப்புகளை யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல், கனத்தை யாருக்கும் கையளிக்காமல் கவனமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. சிலர் 'பாரமான காரியங்களைக்' கொடுத்துவிட ஆயத்தமாயிருப்பார்கள், ஆனால், பதவியை கொடுத்துவிடும் அளவிற்கு மற்றொருவனை ஆயத்தப்படுத்தமாட்டார்கள். இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு (எண்;. 27:20) என்று மோசேக்கு சொல்லப்பட்ட வார்த்தை அப்படிப்பட்டவர்களுக்கே. 


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...