Skip to main content

பெலவீனம் என்னும் பாலம்

 

பெலவீனம் என்னும் பாலம்



அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். (2 கொரி. 12:9)


ஆவிக்குரிய மனிதர்கள் தங்கள் சரீரத்தில் பெலவீனப்படும்போது, சத்துரு அணைத்துவிட நினைப்பது அவர்களது ஆத்துமாவையே. சரீரத்தில் பெலவீனப்பட்டுவிட்டவர்களின், சத்தத்தைக் கூட கேட்க வழிவிடாதபடி விலக்கிவைத்துவிடும் மக்கள் அநேகர். சரீரத்தில் ஒருவேளை அவர்கள் பெலவீனப்பட்டிருந்தாலும், அவர்களது ஆத்துமாவின் அஸ்திபாரமோ, இன்னும் சத்துருவினால் இடிக்கப்படாமலும், அசைக்கப்படாமலும் உறுதியாக நிற்பதனை ஊடுருவிப் பார்க்கும் கண்களைக் கொண்ட மனிதர்கள் வெகு சிலரே. சரீர பெலவீனம், பேசக்கூடாத நிலைக்கும் ஒருவேளை மனிதர்களைத் தள்ளியிருந்தாலும், அவர்களில் இருக்கும் தேவப் பிரசன்னமோ, அவர்கள் இருக்கும் இடத்தில் வல்லமையினை வெளிப்படுத்தி வெளிச்சமாக்கப் போதுமானது என்பதை புரிந்துகொண்டால், உடைந்த பாத்திரத்தில் இருக்கும் உன்னதமான காரியங்களை நாம் இழந்துவிடமாட்டோம். 

சரீரத்தில் பெலவீனமாயிருப்போரைச் சந்திக்கும்போது, பெலவீனம் என்னும் வெளிச்சுவற்றை மாத்திரம் பார்த்துவிட்டு, பரிதாபமான வார்த்தைகளையும் தங்கள் பேச்சுக்களில் உதிர்த்துவிட்டு, பார்த்தது போதும் என்று திரும்பிவிடாமல், அவர்களது உள்ளத்தின் உள்ளறைக்குள்ளும் பிரவேசிக்கும் வார்த்தைகளோடு உரையாடினால் மாத்திரமே, 'பலவீனத்திலே, அவர்களது பலம்' என்ன என்பது நமக்குத் தெரியவரும். சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் (ஏசா. 40:29); ஆனால், இன்றைய நாட்களிலோ, அநேக மனிதர்கள் சோர்ந்துபோகிறவனுடைய பெலனை மேலும் கெடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தை தங்கள் வார்த்தைகளால் சிறுகப்பண்ணிவிடுவிறார்கள். 

அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை  உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான்  உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன் (2 கொரி 12:7,8) என்று எழுதுகின்றார் பவுல். மாம்சத்திலிருந்த முள்ளை நீக்கும்படியாக மூன்றுதரம் வேண்டிக்கொண்டபோதிலும் அது முடிவுக்கு வந்துவிடவில்லை; மாறாக, 'என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்' என்ற பதிலே விடையாகக் கிடைத்தது. மண்ணான சரீரத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுப்பதினால் உண்டாகும் பெலவீனத்தை, பொன்னால் அதனை நிரப்புவதைப் போல தன்னால் தேவன் நிரப்புவதைப் போன்றதுதான் இந்த அனுபவம் (யோபு 23:10). எனவே, பலவீனத்தினாலே பூரணமாய் விளங்கும் பலத்தினைப் புரிந்துகொண்டதும், 'என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்' என்று சந்தோஷமாக எழுதுகிறார் பவுல். 

நம்முடைய வாழ்க்கையிலும், இதனைப் புரிந்துகொள்வது அவசியம். பெலவீனத்தையே தினம் தினம் பார்த்துக்கொண்டிராமல், பெலவீனத்தினை நினைத்து நினைத்தே மனம் உடைந்து அவரது பாதத்தில் வேண்டிக்கொண்டிராமல், நம்முடைய பெலவீனத்தின் மத்தில் பூரணமாக விளங்கும் அவரது கிருபையினைப் புரிந்துகொண்டால், தேவ பெலன் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுவது நிச்சயம். ஆனால், இன்றோ, தங்கள் சரீர பெலவீனத்தையே சாக்காகச் சொல்லிச் சொல்லி, தங்களுக்குள்ளே அடைபட்டிருக்கும் வல்லமையையும், தங்களிடத்திலிருந்து வெளிப்படவிருக்கும் வல்லமையையும் வெளிக்காட்ட வழிவிடாமல், மறைவாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் உண்டு. தங்கள் மேல் இருக்கும் கர்த்தருடைய பெலத்தை உணர்ந்துகொள்ளாமல், தங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்களிடமிருந்து பரிதாபத்தையே தினம் தினம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள் அநேகர். பெலவீனம் என்பது தேவனுக்கும் தங்களுக்கும் இடையில் உருவாக்கப்படும் பலமானதோர் பாலம் என்பதை மறந்துவிட்டு, பலமான அந்த பாலயத்தில் பயணிப்பதையும் பயத்தினால் தவிர்த்துவிட்டு, பரிதாபம் என்ற குழிக்குள் தங்களைத் தள்ளிக்கொண்டோரின் ஆவிக்குரிய வாழ்க்கை கேள்விக்குரியிலேயே முடியும். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...