Skip to main content

கண்ணும், கனியும்

 

கண்ணும், கனியும்

 

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.(லூக் 11:34)

மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.(மத் 12:33)

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை (1யோவான் 1:5) என்று யோவான் எழுதுகின்றார்; அப்படியே, நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் (யோவான் 9:5) என்று இயேசு தன்னை அடையாளப்படுத்துகின்றார். நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருப்போமெனில், இத்தகைய அடையாளத்தை இப்பூவுலகில் நாமும் மனிதரிடையே பதிக்கவேண்டும் என்று தேவனும் விரும்புவாரல்லவா! ஆம், நாம் அழைக்கப்பட்டதும், தெரிந்தெடுக்கப்ட்டதும் அதற்காகவே. எவ்வளவேனும் தன்னில் இருள் இல்லாத தேவன், உலகத்தையும் இருளினின்று மீட்கும்படியாக, ஒளியாகிய இயேசுவை உலகத்திற்கு அனுப்பினார். எனவே இயேசுவின் பிறப்பினைக் குறித்து, 'இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசா 9:2) என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதுகின்றார். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது (லூக் 1:78,79) என்று லூக்காவும் தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகின்றார். உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவா 1:9). ஆம், தேவனும், தேவ குமாரனான இயேசுவும் தம்மில் தாங்களே வெளிச்சமாகவும், இருளில் தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்யவும், மனிதர்களை வெளிச்சமாக மாற்றவுமே செயல்படுகின்றவர்கள்.

என்றாலும், நாம் வெளிச்சமாகப் பிரகாசிக்கவேண்டுவதற்காக இயேசு கொடுத்த ஆலோசனைகளில் ஒன்றே 'உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்' என்பது. நமது கண் முழு சரீரத்தையும் இருளாக்க வல்லது. நம்முடைய கண்களின் பார்வைகள் நம்மை இருளுக்குள் இழுத்துச் செல்ல வல்லது. மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச 5:6) என்றும், பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொள்ளக்கடவோம் (1தெச. 5:8) என்றும் தெசலோனியருக்கு எழுதுவதோடு மாத்திரமல்லாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருங்கள் (1கொரி. 15:34) என்று கொரிந்து சபைக்கும் ஆலோசனையாக எழுதுகின்றார். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ 1:7). இந்த ஆவியின்படி கண்களால் நாம் காணும் காரியங்களைப் பகுத்தறியவும், தேவையற்றவைகளை அறுத்தெறியவும் நாம் பழகிக்கொண்டால், நமது சரீரத்தை இளின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்ளலாம்.

சரீரப்பிரகாரமான கண் மாத்திரமல்ல, ஆவிக்குரிய வாழ்க்கையில் நமது பார்வை எதன் மீது என்பது பிரதானமானது. வாலிபர்கள் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பினும், வாழ்க்கையில் தோல்வியைச் சந்திப்பதற்குக் காரணம் அவர்களது கண்களின் பார்வையே. ஆவியைப் பெற்றிருந்தும், ஞானஸ்நானம் பெற்றிருந்தும், அபிஷேகம் பெற்றிருந்தும், தேவனைப் பற்றிய அறிவிருந்தும், வேத வசனங்களின் ஞானமிருந்தும் கண்களிலோ தெளிவில்லாத நிலை. பெண்ணைக் கண்டதும், விழுந்துவிடும் கண்ணைக் கொண்ட வாலிபர்கள் அநேகர். கர்த்தரைத் தேடிய அவர்களது கண்கள், காதலியைத் தேடத் தொடங்கிவிடுகின்றன. தெளிவற்ற அவர்களது கண்கள் இறுதியில் ஒளியற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றது. சிம்சோனைப் போல நிலைகளைப் பெயர்ப்பவர்களாக அவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் காணப்பட்டாலும், ஒரு புறத்திலோ அவர்கள் தலை தேவனுக்கு விரோதமான காரியங்களின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது.

அப்படியே, வாழ்க்கையில் தாங்கள் எதை நோக்கிப் பிரயாணிக்க தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை அறியாத நிலையிலேயே வாழ்வோர், தவறான பாதையில் பயணிக்கிறதோடு மாத்திரமல்லாமல், இறுதியில் தங்கள் அழைப்பினை இருளாக்கிவிடுகின்றனர். தனிப்பட்ட வாழ்க்கையில் எதை நோக்கி நாம் பிரயாணிக்கிறோம் என்பது நம்முடைய வாழ்க்கையை இருளாக்கிவிடவும், வெளிச்சமாக்கிவிடவும் போதுமானது. வசனத்தின் அடிப்படையிலான தெளிவான வாழ்க்கை வாழ்பவர்கள் மாத்திரமே தங்கள் சரீரத்தை வெளிச்சமுடையதாகக் காத்துக்கொள்ளமுடியும். சபையே! ஜெபக்குழுவே! ஊழியங்களே! ஊழியர்களே! உங்கள் பயணம் எதை நோக்கிச் செல்கின்றது. உங்கள் விளக்கு எதை நோக்கி உங்களை நடத்துகின்றது. வெளிச்சத்தைக் காட்ட மாத்திரமல்ல, உங்கள் சரீரம் முழுவதையும், சபை முழுவதையும் வெளிச்சமாகக் காத்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு நம்முடைய கையிலேயே. இப்படிப்பட்ட சரீரத்தில் முழு வெளிச்சத்தைப் பெற்ற மரத்திலிருந்து வெளிப்படும் கனிகள் நற்கனிகளாகவே காணப்படும். எனவே, நம்முடைய கண்ணைக் காத்துக்கொள்வோம், கனியையும் காத்துக்கொள்வோம். 

Comments

Popular posts from this blog

நீதிமானைக் கொன்ற பாவி

நீதிமானைக் கொன்ற பாவி (Anbin madal published in GEMS Satham, June 2023 GEMS, Bihar) www.sinegithan.in இம்மட்டும் நமக்கு உதவி செய்தவரும் (1 சாமு. 7:12), இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா. 46:4)  என்று நமக்கு துணை செய்கின்றவரும், நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (ஏசா. 45:2) என்று நமது பாதங்கள் பயணிக்கவிருக்கும் பாதைகளை ஒவ்வொரு நாளும் சீர்ப்படுத்துகிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது. ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன்; நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன், வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள்  பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடு

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

வீரர்களை வீழ்த்தும் விழுந்தவர்கள்

 வீரர்களை வீழ்த்தும்  விழுந்தவர்கள் www.sinegithan.in பிரயோஜனமாயிருக்கிறதைப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழிகளில் நம்மை நடத்துகிறவரும் (ஏசா. 48:17), தான் விரும்புகிற பாதையில் மாத்திரமே நம்மை வழிநடத்தி, தனக்கு விருப்பமில்லாத அனைத்தினின்றும் நம்மை விலகச் செய்கிறவரும், ஒவ்வொரு நாளும் நேர்வழியாகவே நம்மை நடத்திச் செல்லுகிறவரும் (ஆதி. 24:48), தடைகள் ஆயிரம் வந்தாலும் அவைகளைத் தாண்டிச் செல்ல பெலன் தருகிறவரும் (மீகா. 2:13), அத்துடன் அவைகள் ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் கூடவே விடை காணச் செய்கிறவரும். நம்முடைய பாதங்கள் மாத்திரமல்ல, பார்வையையும் பிசகாதபடிக்குக் காத்துக்கொள்கிறவரும், காலங்கள் எத்தனையாய் கடுமையானதாகக் கண்களுக்குக் காட்சியளித்தாலும், நம்மை கரம் பிடித்து நடத்துகிறவரும், சூழ்நிலைகள் நம்மை எல்லைக்குள் சுருக்கி வைக்க முயற்சித்தாலும், ஆவியில் அவரோடு எஞ்சியிருக்கும் வேலைகளை விரிவாக்கும் பணியில் முன்னேறிச் செல்லவும் அனுதினமும் நமக்கு உதவி செய்துவருகிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  தேவனுடைய ராஜ்யத்தின் எல்லைகள் விரிவாகிவிடாதபடிக்கு, ஒவ்வொரு நாளும் பல வி