Skip to main content

பாடுகளின் பலன்கள்

பாடுகளின் பலன்கள்

 

அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.(சங் 126:6)

கிறிஸ்துவுக்காகவும், ஆத்தும அறுவடையின் நிமித்தமும் நாம் படும் பாடுகளின் பிரதிபலனைப் பரலோகத்தில் பெறும் வேளை ஆனந்தமானது. பலவிதமான இக்கட்டுகளில் மத்தியில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஆத்துமாக்களை அறுவடை செய்த நாம், அந்த அரிக்கட்டுகள் பரலோகத்தில் அம்பாரமாக அடுக்கிவைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பது பரவசமானது. 'அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்' (ஏசா. 53:11) என்ற ஏசாயா தீர்க்கதரிசனம் அன்று நமக்கும் பொருந்துவதாகிவிடும். நமக்கு உண்டாகும் பாடுகளினால் பரலோகத்தில் ஆத்துமாக்கள் பெருகுமென்றால், நாம் களிகூறவேண்டியவர்களல்லவா! எனவே, பவுல், ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது (2கொரி 1:6) என்கிறார். நம்முடைய பாடுகள் நமது உயிருக்கு எதிரிடையாக இருப்பதைப்போன்று நமது கண்களுக்குத் தோன்றினாலும், அது ஆத்துமாக்களை அறுவடை செய்கின்றது என்ற ஆனந்தத்தையும் நமது கண்கள் காணவேண்டும்.

பாடுகள் கிறிஸ்துவின் பிரமாணங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கின்றன. நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொண்டேன் என்று எழுதுகின்றான் தாவீது (சங். 119:71). நமக்கு வரும் சில துன்பங்களும், துக்கங்களும் கிறிஸ்துவின் பிரமாணங்களை நமக்கு போதிக்கவே தேவனால் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், நாமோ, அவைகளைக் கண்டு கண் கலங்கிவிடுகின்றோம், கண்ணீர் வடித்து அழுகின்றோம், 'ஆண்டவரே, ஏன் எனக்கு இந்த பாடுகள்' என்று புலம்புகின்றோம். அத்தகைய பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட சுற்றி சுற்றி வழியையே தேடிக்கொண்டிருக்கின்றோம். யாராவது உதவ மாட்டார்களா, யாராவது என்னுடைய துக்கத்தில் பங்கெடுக்கமாட்டார்களா என்று மனிதர்களையே தேடி அலைகின்றோம்; ஆனால், 'அத்தகைய பாடுகளின் மத்தியில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய கிறிஸ்துவின் பிரமாணம் என்ன?' என்பதை அறிந்துகொள்ளாமல் விட்டுவிடுகின்றோம். நம்முடைய பாடுகள் பாடங்களைக் கற்றுத்தருகின்றது.

நாம் சந்திக்கும் பாடுகளின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளாவிடில், அது விருதாவாகப் போய்விடும்; அந்த பாடுகளினால் நமது வாழ்க்கையில் பலன் ஏதும் உண்டாயிருக்காது. நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள் (எரே. 2:30) என்று கர்த்தர் சொல்லும் நிலையே பலருடைய வாழ்க்கையில் உண்டாகின்றது. புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போகிறது, பொல்லாப்புகளோ அற்றுப்போகவில்லை; அவர்கள் தள்ளுபடியான வெள்ளி எனப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார் (எரே. 6:30) என்ற நிலையில் தள்ளப்பட்டுக் கிடப்போரும் உண்டு.

பாவங்களின் நெருக்கத்தினால் பரிசுத்தத்தை விட்டுக்கொடுப்பதும்
சத்துருவினைச் சகிக்க இயலாமல் சத்துருவாக மாறுவதும்
பொறுமையாயிருக்கவேண்டிய நேரத்தில் போட்டுடைப்பதும்

இழப்புகளை ஏற்படுத்தும் 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...