Skip to main content

தினமும் தேவன்

 

தினமும் தேவன்

 

நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? (ஆதி. 18:18) என்று தன்னை சிநேகிக்கிற மனிதர்களிடத்தில் தான் செய்யும் காரியங்களை முன்னறிவிக்கிறவர் நமது தேவன்; வருங்காலங்களைக் குறித்த வார்த்தைகள் தேவனிடத்திலிருந்து நமக்கு வெளிப்படுத்தப்படுமென்றால், தேவன் வருங்காலத்தில் செய்யப்போவதைகை; குறித்த அறிவு நமக்கு இருக்குமென்றால் நாம் எத்தனை பாக்கியமுள்ளவர்கள். நாளை என்ன நடக்கும் என்பதை அறியாத மனிதருக்குள், அடுத்த வேளை என்ன நடக்கும் என்று நமக்கு அறிவிக்கும் தேவனைப் பெற்ற நாம் விசேஷித்தவர்கள் அல்லவா. உலகத்தில் நடைபெறவிருக்கும் காரியங்களை மாத்திரமல்ல, நமக்கு விரோதமாக சத்துரு செய்யும் பிரயத்தனங்களையும், தந்திரங்களையும், சதிகளையும் நமக்கு முன்னறிவித்து, நம்மை அதினின்று தப்பித்துக்கொள்ள வகை செய்கின்றார் தேவன். சத்துரு சதி என்ற சடுகுடு விளையாட்டை நடத்தினாலும், நாம் வெற்றிபெறவேண்டும் என்பதுதான் இறைவன் எழுதிவைத்த விதி; இது தேவப் பிள்ளைகளான நம் ஒவ்வொருவருக்கும் பாத்தியப்பட்டது.

வருங்காரியங்களை அறிந்து நாம் செயல்படவேண்டுமென்றால், நாம் தேவனிடத்திலேயே எப்பொழுதும் விசாரிக்கிறவர்களாக காணப்படவேண்டும். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது. 5:7) என்ற வசனம் நாம் அறிந்த ஒன்று, கவலையின் நேரங்களில் நமது மனதினைக் காக்கும் அறிவைக் கொடுப்பது. அவர் நம்மை விசாரிக்கிறதுபோலவே, நாமும் அவரிடத்தில் விசாரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக மாறவேண்டுமே. கவலைகளுக்கு மாத்திரம் கர்த்தரிடத்தில் விசாரிப்பதல்ல, காலடி எடுத்து வைப்பதற்கும் கர்த்தரிடத்தில் விசாரிக்கவேண்டும். நமது வாழ்க்கை வெற்றியுள்ளதாக மாற இதுவே பிரதானமானது.

கோலியாத்தை வெல்லும் பலனை தாவீதுக்கு கர்த்தர் கொடுத்திருந்தார். இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் முடியாது என்று போர் முனையில் அவமானப்பட்டு நின்றுகொண்டிருந்தபோது, தேவபலத்தினால் இதெல்லாம் சாத்தியமே என்று முடித்துக் காட்டியவன் தாவீது. கோலியாத்தை வெற்றிகொள்ளும்போதே தேவனின் பெலன் தன்னுடன் இருப்பதை தாவீது அறிந்துகொண்டான். என்றாலும், அந்த பெலன் என்னுடன் தொடர்ந்து இருக்கிறது, எனவே, நான் போகும் இடமெல்லாம் எனக்கு வெற்றியே கிடைக்கும் என்ற மனநிலையோடு வாழ்ந்துவிடவில்லை தாவீது. என்றோ வெற்றிபெற்ற அனுபவத்தையும், வெளிப்பட்ட பெலத்தையும் நினைவில் கொண்டு தேவனை மறந்துவிடவில்லை தாவீதின் மனது. தனது வாழ்நாட்களில், தொடர்ச்சியாக, ஒவ்வொரு அடியிலும், முடிவெடுக்கும் நிலையிலும், போர் முனையிலும் தேவனிடம் விசாரிக்கிறவனாகவே அவன் காணப்பட்டான். அவனது ஜீவன் வெற்றியோடு முற்றியதற்கு இதுவே ரகசியம்.

பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது (1சாமு. 23:1) அவன் தனக்கு இருந்த முந்திய பலத்தையும், அபிஷேகத்தையும் நம்பி அப்படியே சென்றுவிடவில்லை. 'நான் போய் அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா?' என்று கர்த்தரிடத்தில் விசாரித்தான். அப்பொழுது கர்த்தர்: 'நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக' என்று தாவீதுக்குச் சொன்னார் (1சாமு 23:2). அப்படியே, பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர் எப்ரோனுக்குப் போ என்றார்.(2சாமு 2:1) பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக் கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.(2சாமு 5:19) தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,(2சாமு 5:23) தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.(2சாமு 21:1) தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தான்.

நான் போதகன், நான் சுவிசேஷகன், நான் ஸ்தாபனத்தின் தலைவன், நான் தீர்க்கதரிசி என்ற பெயர்ப்பலகையில் கர்த்தரிடத்தில் விசாரிக்காமல் செயல்படும் ஊழியர்கள் இன்று அநேகர். என்றோ கர்த்தர் தங்களைப் பயன்படுத்தியதை மனதில் கொண்டு, அந்த பெலன் இன்றும் தங்களுக்கு இருக்கிறது என்று துணிச்சலுடன் செயல்படும் ஊழியர்கள் ஏராளம் ஏராளம். இதுவே, மாம்சமான பல முடிவுகளையும், மாம்சமான பல செய்கைகளையும் தலைவர்கள் செய்துவிட வழிவகுத்துவிடுகின்றது. நேற்று கர்த்தர் உன்னை பயன்படுத்தியிருந்தாலும், இன்று செய்பவைகளுக்காக அவரிடத்தில் விசாரிக்கவேண்டும். இப்படிச் செய்வோமென்றால், நம்மையும், நமது ஆவிக்குரிய வாழ்க்கையையும், நமது ஊழியத்தையும் நாம் காத்துக்கொள்ளுவோம். தேவ பெலனும் நம்மைத் தொடர்ந்து வரும். நான் ஊழியன், எனவே நான் செய்யும் அத்தனையும் தேவனால் அங்கீகரிப்பட்டது என்ற போர்வையில், வஞ்சகத்தில் விழுந்துவிடாமல், நான் ஊழியனாயிருந்தாலும், ஆலோசனை அவரிடத்திலிருந்தே வரும் என்ற அறிவு நமக்கு அனுதினமும் உண்டாயிருக்கட்டும். இல்லையென்றால், சிம்சோனைப்போல, வல்லமை இழந்த பின்னரும், தேவ அபிஷேகத்தை இழந்தபின்னரும், 'நசரேயன்' என்ற போர்வையில் ஓடத் துணிந்து, சத்துருவின் கையில் சிக்கிக்கொண்ட நிலையே நமக்கும் நேரிடும். 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...