Skip to main content

அழைப்பும் பிழைப்பும் (லூக் 9:58)

   அழைப்பும் பிழைப்பும்



அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (லூக் 9:58)


தன்னைப் பின்பற்ற விரும்பும் மனிதர்களிடத்தில் காணப்படவேண்டிய சில தரக்கட்டுப்பாடுகளை இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. தேவைகளைத் தேடும் மனிதர்களால் அல்ல, தேவனையே தேடும் மனிதர்களாலேயே அவரைப் பின்பற்றுவது சாத்தியம். தேவைகளிலேயே இடறிவிழும் மனிதருக்கு, தொடர்பயணம் என்பதுதோ தொலைதூரமாகிவிடும். அழைக்கப்பட்ட பின்னும், 'பிழைப்புக்கடுத்த அலுவல்களிலேயே சிக்கிக்கொண்டிருந்தால்' (2 தீமோ. 2:4), அழைப்பின் பாதையிலோ அது பிழையாகிவிடக்கூடும்.

முதலாவதாக, 'நீர் எங்கே போனானும் உம்மைப் பின்பற்றி வருவேன்' என்று சொன்ன மனிதனை நோக்கி, 'மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை' என்று இயேசு சொல்வதின் அர்த்தம், 'அடிப்படை தேவைகளைக்கூட எதிர்பார்க்கும் மனது தன்னைப் பின்பற்றுவோர்க்கு இருந்துவிடக்கூடாது' என்பதே. அடிப்படைத் தேவைகளும் அழைப்பிலிருந்து மனிதனைப் பிரித்துவிடக்கூடும். என்றாலும், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்றும், ஆகாயத்துப் பட்சிகளைப்  நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:25,26) என்றும் இயேசு வாக்களித்திருக்கின்றாரே. (சங். 37:25, 1 தீமோ. 5:18, 1 கொரி. 9:14, மத். 6:34) ஆகிய வசனங்கள் நமக்குரியவைகளே. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும்  ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே (ரோம 8:36,37) என்பதல்லவோ அழைப்பில் உறுதியாயிருந்த பவுலின் வாய்மொழிகள். அடிப்படை தேவைகளைக் கூட எதிர்பார்க்கும் மனதில்லாதவனுடைய அழைப்பின் அஸ்திபாரமே உறுதியாயிருக்கும். ஆவியை ஒப்புக்கொடுக்கும்போதே இயேசு கிறிஸ்து தனது தலையினைச் சாய்த்தார் (யோவான் 19:30). நமக்காக அல்ல, பிறருக்காக தலைசாய்ப்போம்.

இரண்டாவதாக, வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா  என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக் 9:59,60). தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதே அவரைப் பின்பற்றுவதற்கான அடையாளம். நாம் இருக்கின்ற இடங்களில், ஆண்டவரது அன்பைப் பற்றியும், அவர் மனிதர்களுக்காக தனது சொந்தக் குமாரனையே பலியாகக் கொடுத்த பாசத்தைப் பற்றியும், மரணத்தை ஜெயித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் பாவமீட்பினைப் பற்றியும்,  தேவனுடைய ராஜ்யத்தில் மனிதர்களைப் பிரவேசிக்கச் செய்யும் செய்தியினை சுவிசேஷமாக அறிவிப்போமென்றால், நாம் அவரைப் பின்பற்றுகிறவர்களே. தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிறருக்குப் பிரசங்கியாத அல்லது அறிவியாத எந்த ஒரு மனிதனும் அவரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவனே.  

மூன்றாவதாக, பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில்  அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் 

(லூக் 9:61,62). பின்னிட்டுப் பார்க்கும் மனிதர்களால் பின்பற்ற  இயலாது. இஸ்ரவேல் அடிப்படைத் தேவைகளுக்காக எகிப்தை நோக்கிப் பார்த்தார்களே. (எண்; 11:5, யாத் 16:3, எண்; 20:2-4). பின்னிட்டுப் பார்த்தவர்கள் கானானுக்குள் பிரவேசிக்கவில்லையே. அப்படியே, கையை கலப்பையிலும், கண்களையோ உலகத்தின் மேலும் 

 

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...