Skip to main content

பழமில்லை, பார்வையுமில்லை (2பேது 1:9)

பழமில்லை, பார்வையுமில்லை



 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். (2பேது 1:9)


இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது மாத்திரமல்ல, அவரது ரத்தத்தினால் பாவங்கள் கழுவப்படுவது மாத்திரமல்ல, சுத்திகரிக்கப்பட்டதின் பலனான கனிகளை அனுதினமும் வாழ்க்கையில் நாம் கொடுத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார் (ஏசா. 5:1-2) என்று வாசிக்கின்றோமே. நம்முடைய வாழ்க்கையை அவர் சுத்திகரித்த பின் இப்படிப்பட்ட கனிகளையே தினமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். 

ஆனால், நற்குலதிராட்சச் செடிகளை நட்டியிருந்தபோதிலும், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தபோது (ஏசா. 5:2), இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின்வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம். அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார் (ஏசா. 5:5,6). சுத்திகரிக்கப்பட்ட பின்னும், கனிகொடுக்கவில்லையென்றால், கர்த்தருடைய பாதுகாப்பை நாம் இழக்க நேரிடும். அது நம்முடைய வாழ்க்கையை பரிதாபமான நிலைக்குள் தள்ளிவிடும்.

எனினும் பேதுருவோ, பாவங்களறச் சுத்திகரிக்கப்படுவது மாத்திரமல்ல, கனியில்லாத கண்சொருகிப்போன குருடர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது என்று மற்றும் ஒரு மேலான சத்தியத்தை நமக்குப் போதிக்கிறார். இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது (2பேதுரு 1:5-8) என்று எழுதும் பேதுரு, இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான் (2பேதுரு 1:9) என்று அத்தகையோரை முத்திரை குத்துகின்றாரே.

கனியில்லாத மனிதன், காலப்போக்கில் தான் சுத்திகரிக்கப்பட்டதையே மறந்து, ஆவிக்குரிய பார்வையையும் இழந்து நிற்பான். எனவே, 'கனியில்லாத மனிதனை பார்வையில்லாதவன்' என்றே வர்ணிக்கின்றார் பேதுரு. ஆண்டவருடைய கண்கள், நம்மிடத்தில் கனிகளை அல்லவோ தேடுகின்றது. ஆண்டவருடைய பார்வையில் நாம் கனியற்றவர்களாயிருந்தால், நம்முடைய வாழ்க்கை இருளானதே (மத். 6:23). வாய்ப்புகள் கிடைத்தும், அநேகருடைய வாழ்க்கை இன்னும் வெளிச்சமாகவில்லையே (லூக். 13:7). 

பாவங்களறச் சுத்திகரிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் மேல் நாம் கொண்ட விசுவாசமே. என்றாலும், அநேகருடைய வாழ்க்கை சுத்திகரிப்போடே நின்றுபோயிற்று; காலம் செல்லச் செல்ல, சுத்திகரிக்கப்பட்டதே மறந்துபோயிற்று. கசப்பான கனிகளைத் தரும் மரமாக அவர்களது வாழ்க்கை பிறண்டுபோனது. ஒருநாளில் ஆண்டவரால் சுத்திகரிக்கப்பட்டவர்கள், இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவர்கள்; ஆனால், இன்றோ, சுத்திகரிக்கப்பட்டதை மறந்து சத்துருவோடு சுற்றிக்கொண்டிருக்கின்றார்கள். கர்த்தருடைய பாதுகாப்பு எடுக்கப்பட்டதினால், சத்துருவின் படுகுழிக்குள் அவர்களது வாழ்க்கை தள்ளப்பட்டுப்போயிற்று. நம்முடைய வாழ்க்கையிலும், கனிகள் இல்லாதிருக்குமென்றால், கர்த்தருடைய பார்வையில் நாம் குருடர்களாகவே காணப்படுவோம். கனிகளைப் பெருக்கும் காரியங்கள் நம்மிலே பெருகட்டும்.


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...