Skip to main content

உன்னில் உள்ள வெளிச்சம்

 

உன்னில் உள்ள வெளிச்சம்




ஆகையால், உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. லூக்கா 11:35


இயேசுவின் பிறப்பைக் குறித்து, 'இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது (ஏசாயா 9:2) என்று தீர்க்கதரிசனமாக முன் மொழிந்தார் ஏசாயா தீர்க்கதரிசி. இயேசு, தான் மாத்திரம் ஒளியாக பிரகாசிப்பதோடு மாத்திரமல்லாமல், நம்மையும் ஒளியாக மாற்றவே இவ்வுலகத்திற்கு வந்தார். எனவே, நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத். 5:24) என்று இயேசு போதித்தார். யோவானும் இயேசுவைக் குறித்து, உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1:9) என்று எழுதுகின்றார். இயேசுவே வழி, இயேசுவே ஒளி என்று பிரசங்கிக்க மாத்திரம் அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்; இயேசுவண்டை ஜனங்களை ஈர்க்கும் வழியாகவும், இயேசுவண்டை ஜனங்களை நடத்தும் ஒளியாகவும் வாழ்ந்துகாட்டவேண்டியவர்கள்.

உலகத்திற்கு ஒளியாக வந்த இயேசுவை சிலுவையில் அறைந்தான் சத்துரு, இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்க வந்த யோவான் ஸ்நானகனை சிறையில் அடைத்து சிறைச்சேதம் செய்தான் சத்துரு; சுவிசேஷத்தைப் பிரசங்கித்த அப்போஸ்தலர்களையும் சிறையில் அடைத்து, இவ்வாறாக, ஒளியாக வந்தவரையும், ஒளியைக் குறித்து சாட்சிகொடுத்தவர்களையும் சித்திரவதைக்குட்படுத்தி, சுவிசேஷம் என்ற வெளிச்சம் இந்த தேசத்திலும், உலகத்திலும் பரவாதபடிக்கு சத்துரு செயல்படுகின்றான். எனினும், ஒளியாகிய இயேசுவை அடைத்துவைக்கக் கல்லறையால் கூடாமல் போயிற்று, காவலர்களால் கூடாமல் போயிற்று. சிலுவையானாலும், கல்லறையானாலும், பாதாளமானாலும் அத்தனையையும் மேற்கொண்டு இன்னும், இன்றும் உலகத்தில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது இயேசு என்னும் ஒளி. ஏரோது அடக்க நினைத்தபோதிலும், பரிசேயரும் சதுசேயரும் அடக்க நினைத்தபோதிலும், நியாயசாஸ்திரிகள் அடக்க நினைத்தபோதிலும், பிற யூதர்கள் அணைத்துவிடத் துடித்துக்கொண்டிருந்தபோதிலும், இயேசுவைத் தொட்ட அவர்களுக்குத் தோல்வியே எஞ்சியது. அப்படியே, கொடுஞ் சிறையிலும், சித்திரவதையிலும் இயேசுவை மறுதலியாமல், சரீரத்தை துன்புறுத்தும் சத்துருவுக்குக் கொடுத்துவிட்டு, ஆவியை பிதாவின் கைகளில் ஒப்புவித்த அப்போஸ்தலர்களாலும் பிசாசு தோல்வியையே தழுவினான். இவர்கள், மரித்தாலும் தன்னுடைய வாழ்க்கையின் ஒளி இருளாகாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொண்டவர்கள். ஆம், ஒளிக்காக ஜீவனைக் கொடுக்க அழைக்கப்பட்டவர்கள் நாம்; உலகத்திற்கு வழியைக் காட்ட வாழ்க்கையையே தத்தம் செய்ய அழைக்கப்பட்டவர்கள் நாம். நம்முடைய திரியை தூண்டி எரியச் செய்கிறவர் தேவன், ஆனால், சத்துருவோ அதைத் தீண்டி தீண்டி அணைத்துவிடவே வகைபார்த்துக்கொண்டிருக்கின்றான்.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களானாலும், ஊழியர்களானாலும், மிஷனரிகளானாலும், போதகர்களானாலும் எரிந்துகொண்டிருக்கிற அவர்களுடைய திரியை அணைத்துவிட சத்துரு எடுக்கும் முயற்சிகளை நாம் அறிந்து, நம்மைத் தப்புவித்துக்கொள்ளவேண்டும். நம்மில் உள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு நாம் காத்துக்கொள்ளவேண்டும். நண்பர்களினாலோ, உறவினர்களினாலோ, பணிக்களத்திலோ, பணத்தைக் கொண்டோ, எதிர்காலத்தை நினைப்பூட்டியோ, பிள்ளைகளின் வாழ்வைக் காட்டியோ, துன்பத்தையும் துக்கத்தையும் கொடுத்தோ, வியாதிகளின் மூலமாகவோ நம்முடைய வாழ்க்கையில் எரிந்துகொண்டிருக்கிற ஒளியையும், நாம் கொடுத்துக்கொண்டிருக்கின்ற வெளிச்சத்தையும் அணைத்துவிட சத்துரு எடுக்கும் முயற்சிகளை அறிந்துகொள்ளுவோம்; எச்சரிக்கையாயிருப்போம். இருளில் இருக்கிற ஜனங்கள் நம்மில் வெளிச்சத்தைக் காணமுடியாதபடிக்கு நம்முடைய வாழ்க்கையை மாற்றிவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம். இருளோடு நம்முடைய வாழ்க்கை கலந்துவிடக்கூடாது; இருளில் உள்ளோரினிடத்தில் உள்ள தேவனுக்கு விரோதமான பழக்கவழக்கங்கங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம்முடைய வாழ்க்கையில் தென்படக்கூடாது.

சகோதரர்களே! சகோதரிகளே! கிறிஸ்துவைப் பின்தொடரும் உங்கள் வாழ்க்கை, நீங்கள் விட்டு வந்த காரியங்களினால் மீண்டும் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையிருங்கள். சினிமா பார்ப்பதை விட்டுவிட்டேன் என்று சாட்சி சொன்ன பலர், தொலைக்காட்சித் தொடர்களில் தொலைந்துபோய்விட்டனர்; இதெல்லாம் பாவமல்ல, என்று இருளுக்குச் சாதகமாகவே பேசத் தொடங்கிவிட்டனர். திருமணத்திற்கென்று நல்ல நாளைத் தேடி, தேவன் நல்லது என்று சொன்ன ஆறு நாட்களை, பொல்லாதது என்று குறித்துவிடுகின்றனர். குடும்பப் பிரிவினைகளையும், விவாகரத்துக்களைப் பெருக்கி கிறிஸ்தவர்களை வேடிக்கையாக்கி வைத்திருக்கிறான் சத்துரு. கிறிஸ்தவ உலகத்திற்குள் நுழைந்துவிட்ட இருளை அடையாளம் கண்டுகொள்ள இயலாமல் கண் சொருகிப்போய் இருப்பவர்கள் ஏராளம், ஏராளம். வெளிச்சத்தையும், இருளையும் தேவன் வௌ;வேறாகப் பிரித்தார் (ஆதி. 1:4), ஆனால், பலர் வெளிச்சத்தையும், இருளையும் ஒன்றாக வைத்து வாழ முயற்சிக்கின்றனர். வெளிச்சம் இருக்கின்ற இடத்தில், இருள் இருக்க முடியாது என்ற கோட்பாட்டிற்கும் எதிராக, வெளிச்சமாகிய இயேசுவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் இருள் இருக்கிறது என்ற நிலைக்கு பலர் தங்களைத் தள்ளிக்கொண்டனர்.

ஒரு சகோதரியை அறிவேன்; விக்கிரக வழிபாடுகளில் சிக்கிக் கிடந்த அந்த வாலிப சகோதரி இயேசுவின் ரட்சிப்பைப் பெற்றுக்கொண்டார். அந்த சகோதரியினிடத்திலிருந்து வெளிச்சம் வெளிப்படத் தொடங்கியது. அந்த சகோதரியின் வாழ்க்கையின் மூலமாக அநேகர் கிறிஸ்துவை அறிந்துகொள்ளத் தொடங்கினர். ஆனால், திருமணம் செய்துகொள்ளும் வேளை வந்தபோதோ, பெற்றொர் அவளை விக்கிரக வணக்கமுள்ள ஓர் மாப்பிள்ளைக்கு மணமுடித்துவைத்தனர். திருமணம் முடித்த அந்த சகோதரியின் ஆவிக்குரிய வாழ்க்கையினை மெல்ல, மெல்ல சத்துரு திருடிக்கொண்டான். கணவருடன் இணைந்து விக்கிர வணக்கம் செய்பவராகவும் அந்தச் சகோதரியை மாற்றிவிட்டான். அந்த சகோதரியினிடத்திலிருந்த வெளிச்சம் இருளாகிவிட்டது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாம் நமது வெளிச்சத்தை, நண்பர்களுக்காகவோ மற்றவர்களுக்காகவோ பறிகொடுத்து, பரலோகத்தை இழந்துவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...