Skip to main content

பழமானால் பசி தீரும்

பழமானால் பசி தீரும்




வழியில் நாம் நின்றுகொண்டிருந்தால் மாத்திரம் போதாது; மாறாக, இயேசு கிறிஸ்துவின் விழிகள் நம்மிடத்தில் என்ன தேடுகின்றன என்பதையும் நாம் அறிந்திருப்பது அவசியம். ஆயக்காரனுக்குத் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்த சகேயு, இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். என்றபோதிலும், அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான் (லூக் 19:2-4). 'ஆயக்காரனுக்குத் தலைவனும், ஐசுவரியவானுமாயிருந்ததினால்' அடுத்தவரிடத்தில் உதவி கேட்பதற்கு ஒருவேளை சகேயு வெட்கப்பட்டிருக்கக்கூடும். அந்த நேரத்தில் அவனது கண்களில் பட்டது ஒரு காட்டத்தி மரமே. அந்த காட்டத்தி மரம் சகேயுவின் கனவை நனவாக்கியது; சகேயுவின் விருப்பமும் நிறைவேறியது. என்றபோதிலும், அப்போது, உதவிசெய்த காட்டத்தி மரத்தை அல்ல, அதன் மேல் ஏறியிருந்த சகேயுவையே நோக்கிப் பார்த்தன இயேசு கிறிஸ்துவின் கண்கள். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார் (லூக் 19:5). இயேசு கிறிஸ்து போகும் வழியில் காட்டத்தி மரம் நின்றுகொண்டிருந்தபோதிலும், சகேயுவை தன்மீது சுமந்துகொண்டிருந்தபோதிலும். அதனிடத்தில் கனிகள் காணப்பட்டதோ அல்லது காணப்படவில்லையோ? நாம் அறியோம்; எனினும், அப்போதைக்கு இயேசு கிறிஸ்துவின் பார்வைக்கு அது தப்பித்துக்கொண்டது. 

இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார் (யோவா 1:47, 48). அடர்ந்து வளரும் அத்திமரம், தனது நிழலினால் மனிதர்களைக் கவரக்கூடியது. எனவே, சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள் (1இரா 4:25) என்றும், அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரி;ன் வாய் இதைச் சொல்லிற்று (மீகா 4:4) என்று வேதத்தில் வாசிக்கின்றோம். இவ்வாறு, நிழலுக்காக ஒருவேளை நாத்தான்வேல் அத்திமரத்தின் அடியிலே நின்றுகொண்டிருந்திருக்கக்கூடும். இயேசு கிறிஸ்து போகும் வழியில் ஒருவேளை அது நிற்காதிருந்தாலும், அநேக மனிதர்கள் கடந்துசெல்லும் பாதையில் அது நின்றிருந்திருக்கக்கூடும். நாத்தான்வேலுக்கு மாத்திரமல்ல, அநேக மனிதர்களை தனது நிழலினால் அது இளைப்பாற்றியிருக்கக்கூடும். என்றபோதிலும், அதனிடத்தில் கனிகள் காணப்பட்டதோ, காணப்படவில்லையோ, நாம் அறியோம்; இயேசு கிறிஸ்துவின் கண்களுக்கோ அப்போது அது தப்பித்துக்கொண்டது. 

எனினும், இயேசு கிறிஸ்துவோ அதன் மேல் ஏறுவதற்காகவோ, நிழலுக்காகவோ அத்திமரத்தினண்டை செல்லவில்லை; மாறாக, தனது பசியைத் தீர்த்துக்கொள்ளும்படியாக பழங்களையே தேடிச் சென்றார். அப்போது, அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று (மத் 21:19). அவரே அருகில் வந்தபோது மாட்டிக்கொண்டது. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26)

உலக மனிதர்களுக்கு ஒருவேளை நம்மால் இயன்ற உதவிகளைச் செய்துவிடக்கூடும், நம்மிடத்திலிருப்பவைகளைக் கொண்டு அவர்களைத் திருப்திபடுத்திவிடக்கூடும்; என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நாம், கனியற்றவர்களாயிருப்போமென்றால், பட்டமரம்போல விட்டுவிடப்படுவோமே. அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது (நியா 9:10,11) என்று வாசிக்கின்றோமே. ராஜாவாயிருப்பது அல்ல, கனிகொடுப்பதே முக்கியம். மற்றவர்களது காயங்களையும் குணமாக்கும் கனிகள் நம்முடைய வாழ்க்கையில் உண்டாகட்டும் (2 இராஜா. 20:7). மனிதர்களின் வெளிப்புற நிர்வாணத்தை மூடினால் மாத்திரம் போதாது (ஆதி. 3:7), நமது கனிகள் அவர்களது உட்புறத்தை அழகாக்கும்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...