Skip to main content

வஸ்திரம் விலகினால்...

 

வஸ்திரம் விலகினால்...



இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். (வெளி 16:15)


சரீரத்தையும் அதனை மூடும் வெளிப்புற வஸ்திரத்தையும்  மாத்திரமே காத்துக்கொள்வது வாழ்க்கையல்ல; மாறாக, நீதிக்கு  (வெளி. 19:8) முன் நமது உட்புறம் நிர்வாணமாகக் காணப்பட்டுவிடாதபடி நாம் கவனமாயிருக்கவேண்டும். உலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் காத்துக்கொண்டாலும், வஸ்திரத்தை இழந்து நின்றால், வருகையின் வெளிச்சத்தில் நிர்வாணம் வெளிப்பட்டுவிடும்.  ஆஸ்திகளை வைத்துக்கொண்டு, ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தூரமாக அம்மணமாக வாழும் நிலைக்கு சத்துரு நம்மை தள்ளிவிடக்கூடாது. வெளிப்புறத்தில் விலையேறப்பெற்ற வஸ்திரம் (1 தீமோ. 2:9; 1 பேதுரு 3:3); ஆனால், உட்புறத்திலோ, மாம்சத்தால் கறைபட்டிருக்கிற வஸ்திரத்தோடு (யூதா 1:23) நாம் வாழ்ந்துகொண்டிருக்கக்கூடாது; யோசேப்பைப் போல உட்புற வஸ்திரம் கறைபடுவதற்கு முன் வெளிப்புற வஸ்திரத்தை விட்விட்டு ஓடவும் நாம் ஆயத்தமாயிருக்கவேண்டுமே (ஆதி. 39:12). யோபுவைப் போல, பவுலைப்போல சரீரப்பிரகாரமான     நிர்வாணத்தை சத்தியத்திற்காக ஏற்றுக்கொள்ளுவோம். (யோபு 1:21; 2 கொரி. 11:27)

ஆதாமும், ஏவாளும் தேவனால் உண்டாக்கப்பட்டு, தேவ மகிமையினால் மூடப்பட்டிருந்ததினால், நிர்வாணிகளாயிருந்தபோதிலும் வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி. 2:25). மகிமையால் அவர்கள் மூடப்பட்டிருந்தபோது, அவர்களுக்கு மரணமில்லாதிருந்தது; ஆனால், சத்துருவின் வார்த்தைக்குச் செவிகொடுத்து மகிமையின் வஸ்திரத்தை இழந்தபோதோ, மரணம் அவர்களை ஆட்கொண்டது (ஆதி. 3:19). இன்று, இரட்சிப்பின் வஸ்திரத்தால் நம்மை மூடிக்கொண்டால், தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களிலிருந்து நாம் விலகியிருந்தால், மறுவாழ்வில் மகிமையில் நாம் பிரவேசித்து மரணமில்லா வாழ்வினைச் சுதந்தரித்துக்கொள்ள முடியும். சத்துருவின் சத்தம், நமது ஆவிக்குரிய சரீரத்தை நிர்வாணமாக்கிவிடும்.

மோசேயும், ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து நடத்திச்சென்றபோது. மலைக்கு மேலே மோசே தேவனைச் சந்தித்துக்கொண்டிருக்க, மலையின் கீழே இருந்த ஜனங்களோ, ஆரோனை நெருக்கி, தங்களிடத்திலிருந்த பொன்னை உருக்கி, நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள் (யாத் 32:1). தங்களிடத்திலிருக்கும் பொன்னை தேவனுக்கு விரோதமானதைச் செய்ய கொடுத்ததினால், ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான் (யாத் 32:25). தங்கத்தைத்தான் கழற்றிக்கொடுத்திருந்தார்கள்; எனினும், தங்களிடமிருந்த வஸ்திரத்தையும் அவர்கள் இழந்திருந்தார்கள். எதற்காக நாம் கொடுக்கிறோம்? தேவனை விட்டுவிட்டு தெய்வங்களை உருவாக்கவும், தேவனுக்குப் பிரியமற்றவைகளைக் கட்டியெழுப்பவும் கொடுக்கும் தானங்கள் கொடுப்பவர்களையே நிர்வாணமாக்கிவிடும். 

தேவனால் காக்கப்பட்டவன் நோவா; 'இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்' (ஆதி 7:1) என்று தேவனே சாட்சி கொடுத்தவன். எனினும், அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான் (ஆதி. 9:21). வெறிகொண்டது மாத்திரமல்ல, நிர்வாணமாயிருந்தது மாத்திரமல்ல, குமாரனை சபிக்கும் நிலை வரைக்கும் வீழ்ந்தது அவனது வாழ்க்கை. இரட்சிப்பின் வஸ்திரத்தையே விலகச்செய்யுமளவிற்கு, வாழ்க்கையில் எதற்கும் நாம் இடமளித்துவிடக்கூடாது. நம்முடைய வாழ்க்கையின் வஸ்திரம் விலகுமென்றால்; நாம் நிர்வாணமாகக் காணப்படுவது மாத்திரமல்ல, அடுத்தவருடைய சாபத்திற்கும் காரணமாகிவிடக்கூடும்.

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம் 

(2 கொரி. 5:1-3) என்று பவுல் எழுதி உணர்த்துவது சரீரமாகிய கூடாரம் (2 பேதுரு 1:13,14) அழிந்துபோனாலும், நித்திய ஜீவனில் நாம் நிர்வாணிகளாயிருக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தவே.  வஸ்திரத்தை வேகச்செய்யும் காரியங்களிலிருந்து விலகி வாழ்வோம். (நீதி. 6:27)


Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...