Skip to main content

வழி காட்டும் வீரர்கள்

 

வழி காட்டும் வீரர்கள்



தன்னைக் குறித்து தானே அறிந்துகொள்ள அவதியுறும் இவ்வுலக மனுக்குலத்திற்குள், தன்னைக் குறித்து மாத்திரமல்ல, பிறரைக் குறித்தும், அவர்களது பாதைகளைக் குறித்தும், அவர்களது வாழ்க்கையைக் குறித்தும் மற்றும் அவர்களது வருங்காலத்தைக் குறித்தும் விண்ணகத்தின் வெளிச்சத்தில் வெளிப்படையாக அறிந்த ஊழியர்கள் உண்டு. கர்த்தர் காண்பிக்கும் உள்ளங்களை நோக்கி ஓடி ஓடி ஊழியம் செய்யும்படி, அம்மாபெரும் பணிக்கென்று தங்களை அர்ப்பணித்தவர்களாகவும், உயிரையும் பணையம் வைத்தவர்களாகவும், தங்களைத் தாங்களே உந்தித்தள்ளிக்கொள்ளும் ஊழியர்கள் அநேகர் உண்டு. கனனமான ஊழியத்திற்கு கர்த்தரால் அழைக்கப்படவேண்டும் என்று காத்திராமல், 'போ' என்ற வார்த்தையைக் கேட்காமலேயே புறப்பட்டுச் செல்பவர்கள் இவர்கள். ஆத்துமாக்களைச் சந்திக்கும்படியாகவும், இரட்சிப்பின் வழிக்கு நேராகத் திருப்பும்படியாகவும், பிறருடைய தியாகங்களை எதிர்பார்த்து அல்ல, தங்களையே தியாகமாக பலிபீடத்தில் வைத்து பயணம் செய்பவர்கள் இவர்கள். 

இத்தகைய ஊழியர்களைப் புரிந்துகொண்டு, அவர்களது வார்த்தைகளுக்குச் செவிமடுத்து, தங்களது ஆத்துமாக்களைத் தப்புவித்துக்கொண்ட மனிதர்கள் அநேகர் உண்டு; எனினும், உணர்வற்றவர்களாக, இருளின் ஆதிக்கத்திற்குள்ளும், உலகத்தின் பிடியிலும், மாம்சீக இச்சைகளிலும் மற்றும் பிசாசின் பிட்சிலும் தங்கள் பாதங்களைச் சிக்கவைத்துக்கொண்டவர்களாக, அத்தகைய ஊழியர்களின் வார்த்தைகளை மனதில் கொள்ளாமலும், சிந்தியாமலும், பாவத்தின் சம்பளமான இரண்டாம் மரணத்திற்கு நேராகவே தங்கள் ஆத்துமாவை இழுத்துக்கொண்டு செல்லும் மனிதர்கள் ஏராளம். நரகத்தின் வேதனைக்குத் தப்பும்படியாக, நம்மிடத்தில் அனுப்பப்படும் ஒற்றர்களான ஊழியர்களை நாம் உணர்ந்துகொள்வது அவசியம். அவர்கள் நம்மைத் தப்புவிக்கும்படியாக தெரிந்துகொள்ளப்பட்ட கர்த்தருடைய கரத்தின் பாத்திரங்களே என்பதை புரிந்துகொண்டோமானால், ஆத்துமாவை அழிவினின்று நாம் காத்துக்கொள்வது நிச்சயம். 'போகவேண்டாம்' என்று ஊழியர்கள் எச்சரிக்கும் இடத்திற்கு நாம் போவோமென்றால், நம்முடைய பயணம் திரும்பிவரக்கூடாததாக மாறிவிடக்கூடும். புத்தியீனனான வாலிபனின் ஈரல் குத்திக் கிழிக்கப்பட்டது போல (நீதி. 7:23), நம்முடைய வாழ்க்கையும் சத்துருவினால் சிதைக்கப்பட்டுவிடக்கூடும். நம்முடைய ஆத்துமாவை காப்பாற்ற இயலாமற்போகும் யுத்தத்தில், நம்முடைய சரீரத்தை ஈடுபடுத்தாதபடிக்கு நாம் கவனமாயிருக்கவேண்டும்.

சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணியபோது, தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான் (2 இராஜா. 6:8-10). இஸ்ரவேல் ராஜா எடுத்த இந்த முடிவினிமித்தம், அவனது ஜீவன் மாத்திரமல்ல, தேசத்து ஜனங்களின் ஜீவனும் காக்கப்பட்டது அல்லவா. நம்முடைய வாழ்க்கையிலும், சில நேரங்களில் சத்துருவை வெற்றிகொள்ளும்படியாகவும், யுத்தத்தைச் சந்திக்கும்படியாகவும் தேவன் நம்மை புறப்பட்டுச் செல்லும்படியாக ஆணையிடக்கூடும்; எனினும், சில நேரங்களிலோ, 'இன்ன இடத்திற்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்' என்ற இத்தகைய எச்சரிப்பை விடுத்து யுத்தத்திலிருந்து நம்மை விலகிச் செல்லும்படியாக வழிநடத்தக்கூடும்.

கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்துக்கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயை நோக்கி, நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தபோது, மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்;றான்.என்றபோதிலும், மோசேயின் வார்த்தைக்கு செவிகொடாமல், மலையின் மீது அவர்கள் ஏறத் துணிந்தபோது, அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்களே (எண்; 14:40-45). வீழ்ந்துபோன ஆத்துமாவை வைத்துக்கொண்டு நாம் வீரர்கள் என நிரூபிக்கத் துணியக்கூடாது. 

பாலிய இச்சை (2 தீமோ. 2:22), மாம்ச இச்சை (1 பேதுரு 2:11), வேசித்தனம் (1 கொரி. 6:18),  விக்கிரக ஆராதனை (1 கொரி. 10:14; (1 யோவான் 5:21), புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் (2 தீமோ. 2:23), சீர்கேடான வீண்பேச்சு (2 தீமோ. 2:16) மற்றும் சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகள் (1 தீமோ. 4:7) போன்ற பாவங்களுக்கு விலகுங்குள் என்று வேதம் வழிகாட்டுகின்றதே. விலகிச் செல்லவேண்டிய இடத்தை விட்டுவிட்டு, விழிகளால் பார்த்துக்கொண்டேயிருப்போமென்றால் விழுந்துவிடுவது நிச்சயம். 'கர்த்தருடைய சந்நிதிக்கு விலகும் நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுவிடுவது நிச்சயம் (ஆதி. 3:8). சரீரத்தை யுத்தத்திற்குப் பயன்படுத்தி, ஆத்துமாவை சத்துரு அழித்துவிடும் தந்திரத்திற்குத் தப்பிக்கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...