Skip to main content

தூண்டில்

 

தூண்டில்



ஆண்டவரோடு இணைந்திருப்பதினால் உண்டாயிருக்கும் ஆசீர்வாதங்களை மட்டுமே அனுபவித்து, அர்ப்பணிப்பையோ அதற்கடுத்ததாக நாம் மாற்றிவிடக்கூடாது. ஆசீர்வதிக்க வரும் ஆண்டவரை தங்கள் முழு இருதயத்தோடும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அதே  நேரத்தில், அழைக்கும்படியாக வரும் அவரையோ, மோசேயைப் போல, 'நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்' (யாத் 4:10) என்று அரைகுறையான மனதுடன் தங்கள் தகுதியையும், தரத்தையும் சொல்லித் தப்பிக்க விழையும் கூட்டமும், பேதுருவைப் போல, 'நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும்' (லூக். 5:8) என்று அவரை அனுப்பிவிட விரும்பும் கூட்டமும் இவ்வுலகத்தில் அதிகம் உண்டு. ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டபின் ஆண்டவரை அனுப்பிவிட பேதுரு நினைத்தபோது, ஆண்டவரோ, அழைப்பிற்கடுத்த தூரமான பயணத்திற்கான தூண்டிலே அது என்பதை உணர்த்தும் வண்ணமாக,  'பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்' (லூக் 5:10) என்றாரே. பேதுருவின் வலை இராமுழுவதும் கடலிலிருந்து காலியாக வந்ததற்குக் காரணம், கடல் பணியை முடித்துவிட்டு கர்த்தருடன் பயணத்தைத் தொடரவேண்டும் என்பதற்காகவே. போடப்படும் புழுக்கள் எல்லாவற்றையும் தின்றுவிட்டு கடலுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருக்கவே பல நேரங்களில் நாம் விரும்புகின்றோம்; ஆசீர்வாதத்தை மட்டுமே அனுபவித்தவர்களாக அர்ப்பணிப்பை விட்டு நமது வாழ்க்கையை அப்புறப்படுத்திவிடுகின்றோம். எனினும், ஆசீர்வாதங்கள் அனைத்தும் அர்ப்பணிப்பிற்கான தூண்டில்களே. 

கெனேசரேத்துக் கடலருகே இயேசு கிறிஸ்து சென்றுகொண்டிருந்தபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படியாக அவரை நெருக்கிக்கொண்டிருந்தார்கள் (லூக். 5:1); ஆனால், அதே கடற்கரையில் நின்றுகொண்டிருந்த இரண்டு படகில் உள்ளவர்களோ, படகுகளை விட்டிறங்கி தங்கள் வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள் (லூக். 5:2). ஒருகூட்ட ஜனங்களின் இருதயங்களில் தேவவசனத்தைக் குறித்த தாகமும், கேட்கவேண்டும் என்ற வாஞ்சையும் நிரம்பியிருந்தது; எனினும், இந்த இரண்டு படகுகளிலிருந்த மீனவர்களின் இருதயங்களிலோ, இராமுழுவதும் பிரயாசப்பட்டும் தங்களுக்கு ஒன்றும் அகப்படவில்லையே ஏதும் தங்கள் வலைகளில் கிடைக்கவில்லையே என்ற தவிப்பும் வருத்தமும் நிரம்பியிருந்தது.   

ஆசீர்வாதங்கள் எதற்கு அருளப்படுகின்றன என்பதை அறிந்துவைத்திருந்தான் தாவீது. எனவே, 'நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன் வேலைக்குப் பொன்னையும், வெள்ளி வேலைக்கு வெள்ளியையும், வெண்கல வேலைக்கு வெண்கலத்தையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன்' (1 நாளா 29:2) என்று தன் குமாரனாகிய சாலொமோனிடத்தில் கூறுகின்றான். தன்னிடத்தில் கொடுக்கப்பட்டவைகள் எதற்கு என்றும், எதற்காகச் செலவிடப்படவேண்டியவைகள் என்றும் நன்றாக அறிந்துவைத்திருந்தான் தாவீது. அவ்வாறே, அப்போஸ்தலனாகிய பவுலும் கொரிந்தியருக்கு எழுதும்போது தனது நிருபத்தில், 'ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய்  உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்' (2 கொரி. 12:15) என்றே எழுதுகின்றார். மேலும், மக்கெதோனியா நாட்டுச் சபைகளைக் குறித்து பவுல் எழுதும்போது, 'அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்' (2 கொரி. 8:2) என்று எழுதுகின்றாரே. மக்கெதோனியா நாட்டு மக்கள், ஆசீர்வாதத்தினால் நிரம்பியிருந்த நாட்களில் அல்ல; மிகுந்த தரித்திரத்திலிருந்தபோதிலும்,  தங்களிடத்திலிருக்கும் 'கொஞ்சமும் ஆண்டவருக்காகக் கொடுக்கப்படவேண்டியதே' என்பதை அறிந்துகொண்டவர்கள். 

மேலும், ஒரு ஏழை விதவை காணிக்கைப் பெட்டியிலே இரண்டு காசைப் போடுகிறதை இயேசு கிறிஸ்து கண்டபோது, 'இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' (லூக். 21:3) என்று சொன்னாரே. ஜீவனுக்கானது மாத்திரமே தன்னிடத்தில் உண்டு; கொடுப்பதற்கோ தன்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய நிலையில் அந்த விதவை காணப்பட்டாலும், ஜீவனுக்குரியதையே அதாவது ஜீவனையே அவருக்குக் கொடுத்துவிட்டாளே! அத்துடன், 'இதோ நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் என் குமாரனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்' (1 இராஜா. 17:12) என்று சாறிபாத் விதவை சொன்னபோதிலும், 'கொண்டுவா' என்று எலியா சொன்னபோது, தன்னிடத்திலிருப்பதிலும் 'கொடுக்கவேண்டிய பங்கு உண்டு' என்பதை அவள் உணர்ந்துகொண்டாளே. பங்கு கொடுத்து தப்பித்துக்கொள்ளும்படியாக அல்ல, நம்மையே அவருக்காக பலியாகக் கொடுக்கும்படியாகவே ஆசீர்வாதங்கள் நமக்குக் கொடுக்கப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்

  கிறிஸ்துவுக்குள் கிறிஸ்தவன்   வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கிறிஸ்துவின் குணங்களை வெளிப்படுத்தவேண்டியதும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியதும் கிறிஸ்தவனின் தலையாயக் கடமை.  கிறிஸ்துவுக்குள்  வாழும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சில உண்மைகளை பவுல் எபேசு சபைக்குச் சுட்டிக்காட்டுகின்றார். கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள்  (எபே. 1:3),  பாவமன்னிப்பாகிய மீட்பு  (எபே. 1:7) இவைகள் பொதிந்திருக்கின்றன. ஆனால், இவ்விரண்டிற்கும் பலர் முக்கியத்துவம் கொடுக்காமல், உலகத்தின் ஆசீர்வாதங்களையே அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். பாவமன்னிப்பினைப் பெறாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறாமல், உலகத்தின் ஆசீர்வாதங்களுக்காகவே அவரின் பின்னே ஓடினால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் முடிவு பரிதாபமாகவே இருக்கும். உன்னதங்களில் உட்காரவேண்டிய நாம் உலகத்தோடு ஒட்டிவிடுவோம், மணவாளனோடு வாழவேண்டிய நாம் மண்ணுக்காக வாழ்ந்துவிடுவோம். கிறிஸ்துவிடம் பிரதானமாய் பாவமன்னிப்பையே முதலில் பெற நாடுவோம்; அதற்காகத்தானே பிதா இயேசுவை இந்த பூமியில் அனுப்பினார். எனவே, பிதாவின் பி...

இறைச்சியா? இச்சையா?

இறைச்சியா?  இச்சையா? 'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்' (மத். 6:11) என்றும், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத். 6:34) என்றும் பிதாவை நோக்கி ஜெபிக்க இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக்கொடுத்திருந்தபோதிலும், உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே 'உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்' (மத். 6:8) என்பதுதானே பிதாவைக் குறித்து இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிமுகம். 'முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்' (மாற். 7:27) என்பதுதான் அவரது விருப்பமும் கூட. 'வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (மத். 10:10) என்றும், 'வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்' (லூக். 10:7; 1தீமோ. 5:18) என்றும் நாம் வாசிக்கின்றோமே. அப்படியிருக்க, 'ஆகாரத்திற்காக வேலை' மற்றும் 'கூலிக்காக வேலை' என்ற என்ற பார்வையில் நமது பயணம் தொடர்ந்துவிடக்கூடாததல்லவா! 'இழிவான ஆதாயம்' நமது வழிகளை மாற்றிவிடக்...

வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்

  வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள்   அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது,  இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.  ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்;  ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.(லூக் 4:25-27) இஸ்ரவேலின் தேவனாக இருந்தபோதிலும், இஸ்ரவேல் தேசத்திலேயே தனது குமாரனை மேசியாவாகப் பிறக்கச் செய்தபோதிலும், பஞ்ச காலத்தின்போது, இஸ்ரவேலருக்குள் இருந்த அநேகம் விதவைகள் போஷிக்கப்படாமற்போனதற்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், ந...