Skip to main content

Posts

இதயங்கள் திரும்பட்டும்

 இதயங்கள் திரும்பட்டும் www.sinegithan.in தேவனை விட்டுத் தூரமாய் நிற்கும் ஜனங்களை, தேவனிடமாய்த் திருப்புவதே தேவ ஊழியர்களின் பிரதானப் பணி. தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்புவதற்கு முன்னும், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்தில் பிரவேசிக்கச் செய்தபோதும், தன்னுடைய ஒரே பேறான குமாரனை பரத்திற்கு எடுத்துக்கொண்டு, அவர் செய்து முடித்ததினாலும் மற்றும் ஜெயித்து முடித்ததினாலும், தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியை இந்த உலகத்தில் நமக்கு அனுப்பித்தந்ததினாலும் உண்டான பின் விளைச்சலை அறுக்கும்படியாக, இவ்வுலகத்தில் பரலோக இராஜ்யப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் பன்னிரெண்டாம் மணி நேர பணியாளர்களாகிய ஊழியர்களைக் கொண்டும் இடைவிடாது இன்றுவரை தேவன் செய்துவரும் பணி இதுவே. இந்த இலக்கினை அடையும்படியாகவே, அநேக தீர்க்கதரிசிகளையும், அப்போஸ்தலர்களையும், தேவ மனிதர்களையும் இன்றுவரை தேவன் எழுப்பிவருகின்றார்; அவர்களில், ஒருவருக்கொருவரைத் தொடர்புபடுத்தி, இயேசு கிறிஸ்து கூறிய இரண்டு தேவ மனிதர்களாகிய எலியா மற்றும் யோவான் ஆகியோரின் பணிகளும், அத்துடன், மனிதனாக இவ்வுலகத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவின் ப

சபை சாரத்தை இழப்பது ஏன்?

சபை  சாரத்தை இழப்பது ஏன்?  (Anbin madal published in GEMS Satham, Oct. 2022 GEMS, Bihar) 'இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை  மேற்கொள்வதில்லை' (மத். 16:18) என்று நமக்கு நம்பிக்கையூட்டுகின்றவரும், 'உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்' (சகரியா 2:8) என்று அவருக்கும் நமக்கும் இருக்கின்ற உறவையும் கூடவே பாதுகாப்பினையும் உறுதி செய்கின்றவரும், 'ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்' (உபா. 28:7) என்று அவர் நம்முடைய பட்சத்தில் இருப்பதினால் வரும் பலனைக் காணச் செய்பவரும், 'இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்' (மத். 21:44) என்று நாம் சார்ந்து நிற்கும் கன்மலையாகிய கிறிஸ்துவின் பெலத்தைக் உணரச் செய்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சோர்ந்துபோகிறவனுக்கு பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறவரும் (ஏசா. 40:29), வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகள

தரிசனத்தை இழந்துவிடாதே

 தரிசனத்தை இழந்துவிடாதே? (Anbin madal published in GEMS Satham, August 2022, GEMS, Bihar) கால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு நம்மைக் காப்பவரும் (நீதி. 3:26), தமது வலது கரத்தினால் நம்மைத் தாங்குகிறவரும் (சங். 63:8), நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நம்மை நடத்துகிறவரும் (நீதி. 8:21), நமக்குப் போதித்து, நடக்கவேண்டிய வழியை நமக்குக் காட்டுகிறவரும், நம்மேல் தமது கண்ணை வைத்து, நமக்கு ஆலோசனை சொல்லுகிறவரும் (சங். 32:8), நீடித்த நாட்களால் நம்மை திருப்தியாக்கி, தனது இரட்சிப்பை நமக்குக் காண்பிக்கிறவருமாகிய (சங். 91:16) ஆண்டவரின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள்.  சூழ்நிலைகள் சுற்றிலும் நம்மை நெருக்கி, நிலை தடுமாறச் செய்ய பல நிலைகளில் முயற்சித்தபோதிலும், 'மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?' என்று நம்மை முழங்கச் செய்கிறவரும், 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்' (1 கொரி. 15:55,57) என்றும், 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு' (பிலி. 4:13) என்றும் துதிக்கப் பண்ணுகிறவர

'பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது'

www.sinegithan.in தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது ; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. (லூக். 1:13) நம்முடைய வாழ்க்கையின் குறைவுகளைப் பார்த்துப் பார்த்து குன்றிப்போக அல்ல, விட்டுவிடப்பட்டிருக்கும் தேவனுடைய ராஜ்யத்தின் எஞ்சியப் பணியினை விரைந்து நிறைவாக்குவதற்காகவே அழைக்கப்பட்டவர்கள் நாம். இச்செய்தியைச் சுமந்துவரும், ஆசாரியனாகிய சகரியா மற்றும் அவனது மனைவியாகிய எலிசபெத்து ஆகியோரின் இல்லற வாழ்க்கை நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் (லூக். 1:6); எ ன்றபோதிலும், அவர்களுடைய குடும்ப வாழ்வில் குறைவு காணப்பட்டது; அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; ஆபிரகாம் - சாராள் தம்பதியினரைப் போல, இவர்களும் வயது சென்றவர்களாயிருந்தபடியினால், தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இல்லாதிருந்தது. குழந்தை இல்லாத நிலையிலும், சகரியா மற்றும் எலிசபெத்து

வீட்டுக்குப் போகாத வீரன்

வீட்டுக்குப் போகாத வீரன் யுத்தத்திலிருக்கும் வீரனை வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதே சத்துருவின் குறிக்கோள். வீரனை வீழ்த்த பெலனற்ற சத்துரு, வீரனின் வீட்டுக்குள் நுழைந்து, மாற்றுவழியைக் கையாளுகின்றான். மற்றவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தாங்கள் தப்பித்துக்கொள்ள தீவிரவாதிகள் முயற்சிப்பது போலத்தான். இன்றும், போருக்குப் புறப்படும்  பல வீரர்களை, 'தாழக் குதியும்'  (மத். 4:6) என்று தூண்டி, தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை தாங்களே மாய்த்துக்கொள்ளம்படிச் செய்கிறான்; சிலரையோ, 'நீர் சாஷ;டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்துகொள்ளும்' (மத்.  4:9) என்று உலக ஆசைகளால் உள்ளத்தை நிறைத்து, கைகளிலும் சிலவற்றை அள்ளிக்கொடுத்து அவர்களை புறமுதுகுக் காட்டச்செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறான்; 'அப்பாலே போ' (மத். 4:10) என்ற வார்த்தையைச்  சொல்லாததால், அநேகர் அகப்பட்டுக்கொண்டார்கள்.   உரியா போர்முனையில் நின்றவன்; போருக்குப் போகாத தாவீதின் கண்கள் உரியாவின் வீட்டிற்குள் போய்விட்டன. ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய மனதில்லாதவன், உடனிருக்கும் ஆத்துமாக்களுக்கு ஆபத்தானவன். தாவீது, உரியாவின்

ஆஸ்திகளா? ஆத்துமாக்களா?

www.sinegithan.in மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ;டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? (மத் 16:26) என்பதுதான் உலகத்திலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் முன்பாக இயேசு கிறிஸ்து வைத்திருக்கும் பிரதானமானதோர் கேள்வி. தங்களது ஆத்துமாவுக்கு இருக்கும் பிரதானமான மதிப்பினை உணராமல், ஆஸ்திகள் மேலேயே கண்களைத் திருப்பினவர்களாக, தினம் தினம் இவ்வுலகத்தில் பயணத்தைத் தொடரும் மனிதர்கள் இன்றும் அநேகர்.  நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன் (நீதி 11:30) என்றே எழுதுகிறார் சாலொமோன்; அப்படியே பவுலும், நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன் (1கொரி 9:19) என்று தனது நிருபத்தில் எழுதுகின்றார். ஆனால், பலரோ, தங்களது ஆத்துமாக்களைக் குறித்தும் கவலைப்படாமல், பிறரது ஆத்துமாக்களைக் குறித்தும் கவலைப்படாமல், ஆஸ்திகள் இருந்தால் மட்டும் போதும்; அதுவே ஆனந்தம் என்ற நிலையில், ஆஸ்திகள் அனைத்தையும் சரீரத்திற்